தமிழக அரசுப் காலிப் பணியிடங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியின் தகுதிகேற்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது தேர்வு நடைமுறைகளில் பல்வேறு சீர்த்திருந்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குரூப் 1 மற்றும் குரூப் 2 பணிகளுக்கு (TNPSC) தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்பது கட்டாயமாக இருந்து வருகிறது. அதில் கிடைக்கும் மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டு, முக்கிய பதவிகளில் தேர்வர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
குறிப்பாக, குரூப் 2-வில் தேர்ச்சி பெறுபவர்கள், நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்.
 
 
 
 
 
No comments:
Post a Comment