Monday, November 29, 2021

தமிழ் வழி கல்விச் சான்று (PSTM Certificate) பெறுவது எப்படி?

வணக்கம் அன்பர்களே.. TNPSC போன்ற அரசு நடத்தும் வேலை வாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றால், தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும் என்ற நிலை உள்ளது.  தமிழ் வழியில் பயின்றோருக்கான முன்னுரிமை பெற இந்த PSTM Certificate கட்டாயம் பெற வேண்டியுள்ளது. 

tamil vali kalvi chanru peruvathu eppadi


இன்னும் கூட சிலருக்கு "தமிழ் வழி பயின்றோர் சான்று" என்றால் என்ன என்பதே தெரியாமல் இருக்கிறது. அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல், இறுதி வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்றோர்களுக்கு வழங்கும்படும் சான்றிதழ் தான் அது. 

தமிழ் வழி சான்றிதழ் யார் வழங்குவார்கள்? 

அந்தந்த தலைமையாசிரியரிடம் அதற்குரிய படிவத்தை நிரப்பி, கையெழுத்து பெற்று சமர்பிக்கலாம். கல்லூரி என்றால், கல்லூரி முதல்வர் கையெழுத்திட்டு வழங்குவார். 

தமிழ் வழிச் சான்று படிவம் | PSTM Certificate in Tamil

தமிழ் வழி கல்வி பயின்றதற்கான சான்றிதழ் அப்படி என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு ஆங்கிலத்தில் PSTM Certificate என்று பெயர்.இந்த சான்றிதழ் எதற்காக வாங்க வேண்டும், இதை எதற்கு பயன்படுத்த வேண்டும் மேலும் அதை எப்படி பெற வேண்டும் என்பதையெல்லாம் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

PSTM சான்றிதழ் ஒரு விளக்கம்:

PSTM Certificate இதற்கு Full Form Person Studied In Tamil Medium. அதாவது நீங்கள் தமிழ் வழி கல்வியில் பயின்றதற்கான ஆதாரமாக இந்த சான்றிதழை வாங்க வேண்டும். இதை எதற்கு வாங்க வேண்டும் என்றால் நீங்கள் ஏதேனும் பொதுத்தேர்வு எழுதும் போது அதில் மதிப்பெண்கள் அல்லது Rank List-ல் பின் தங்கியிருந்தால் அப்பொழுது இந்த PSTM Certificate உங்களுக்கு உதவும்.

ஏனென்றால் தமிழ்நாடு அரசு தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தந்துள்ளது.

உதாரணத்திற்கு: TNPSC தேர்வில் 1000 காலியிடங்கள் இருந்தால் அதில் 200 காலியிடங்கள் Tamil Medium படித்தவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும்.

மேலும் அரசு துறைகளான நீதித்துறை, வனத்துறை, காவல் துறை போன்றவற்றில் நடக்கும் போட்டித் தேர்விற்கு இந்த PSTM Certificate உங்களுக்கு உதவும்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களான தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களை தமிழில் படித்திருப்பவர்கள் இதனை பெற முடியும்.

ஆங்கில வழி கல்வி பயின்றவர்கள்,  அதாவது தமிழை தவிர்த்து,  பிற பாடங்களை ஆங்கிலத்தில் கற்றவர்கள் இந்த PSTM Certificate-ஐ பெற முடியாது.

அதே போல கல்லூரியிலும் ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களை தமிழில் படித்திருக்க வேண்டும். ஏனென்றால் Group -4 போன்ற தேர்வுகளுக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு இருந்தாலே போதும்.

ஆனால் Group-1, Group-2 போன்ற தேர்வுகளுக்கு கல்வி தகுதி Degree என்பதால் இளங்கலை பட்டம் தமிழில் படித்திருந்தால் மட்டுமே இந்த PSTM Certificate -ஐ பெற முடியும்.

தமிழ் வழி கல்விச் சான்று பதிவிறக்கம் செய்ய சுட்டி:

Download PSTM Certificate Form


இந்த வீடியோவில் மேலும் சில விளக்கங்கள் கிடைக்கும். 

TAMIL VALI KALI CHANRITHAL PERA VALIMURAIGAL - VIDEO

Tags: tamil vali kalvi certificate, tamil vali kalvi sanrithal, tamil vali kalvi chanrithal, தமிழ் வழி கல்வி சான்றிதழ் படிவம் pdf, தமிழ் வழி கல்வி சான்றிதழ் படிவம் pdf download, Tnpsc தமிழ் வழி கல்வி சான்றிதழ் pdf

No comments:

Post a Comment