Thursday, October 28, 2021

TNPSC குரூப் 4, விஏஓ தேர்வுகள் அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு..!

 டிஎன்பிஎஸ்சி குரூப் 4, விஏஓ தேர்வுகள் அறிவிப்பு குறித்து குட் நியூஸ் வெளியாக உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகள் நடத்தப்பட்டுவருகிறது. அரசுத்துறைகளில் ஆரம்ப பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வின் மூலம் காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டு வரப்படுகிறது. குரூப் 4 தேர்வுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும் என்பதால் இந்த போட்டி தேர்வில் லட்ச கணக்கானோர் போட்டியிடுகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் உள்ளிட்ட பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது. இத்தேர்விற்க்கான வயது தகுதி கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு.


குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். மொழிப்பாடம் மற்றும் பொது அறிவு என வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும்.

TNPSC ஆண்டுத்திட்டம்படி கடந்த மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், கொரோனா காரணமாக கடந்த 2020 முதல் புதிதாக குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் திட்டமிட்டப்படி, குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறாமல் உள்ளன. தற்போது இயல்பு நிலை திரும்புவதால், குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு தயராகி வரும் நபர்கள் மகிழச்சியில் உள்ளனர்.

tnpsc group 4 exam notification


No comments:

Post a Comment