டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு உதவும் தமிழ் பாடக்குறிப்புக்கள் - பகுதி 18

TNPSCGK Editorial Team
0

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

தேர்வில் நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே பொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும். ஒரு சொல் மட்டும் பொருந்தாமல் தனித்து நிற்கும். அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும்.

மேலும் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை தெரிந்து கொண்டால் இன்னும் எளிமையாக இருக்கும்.

tnpsc tamil notes



Tnpsc information all

1. மூவண்ணம் - காவி, வெண்மை, பச்சை
2. மூவேந்தர்கள் - சேரன், சோழன், பாண்டியன்
3. முக்கனி - மா, பலா, வாழை
4. முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
5. முப்பால் - அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
6. முக்காலம் - இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்
7. முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
8. மூன்று முரசு - கொடை முரசு, படை முரசு, மங்கள முரசு
9. முச்சங்கம் - முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
10. மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை
11. நாற்திசை - கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
12. நாற்பால் - அரசன், அந்தணன், வணிகன், வேளாளன்
13. நான்கு குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
14. நால்வகை சொல் - பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
15. நான்மறை - ரிக், யஜூர்,சாமம், அதர்வணம் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top