டிஎன்பிஎஸ்சி குறிப்புகள் (ஸ்மார்ட் வொர்க்) 2020

மாணவர்கள் தேர்வு நேரத்தில் உளவியல் ரீதியாக ஏற்படும் பயம் மற்றும் தடுமாற்றம் போக்க வேண்டும் .

நான் ஏற்கனவே கூறியதுபோல் இங்கு சுமார்ட் ஒர்க்தான் வேலை செய்யும் .

கடின உழைப்பைவிட 200 கேள்விக்கு பதில் தரும் யுக்தி அறிந்து கொள்ளுங்கள் அதுதான் அவசியமானது.

எல்லாம் படித்து எதையும் எழுதாமல் வருவதைவிட தேர்வு நேரத்தில் எதை படிக்க வேண்டுமோ அதை படிக்கவும் அதுதான் சிறந்த வழியாகும் .

போட்டிதேர்வு போட்டி தேர்வு எழுதும் உங்களுக்கான சிறிய பயிற்சிகள் தேர்வு நேரம் முடியும் தருணம், தேர்வு மாதம் தேவையில்லாத மாதமாக தோன்றும் மேலும் அனைவருக்கும் நெருக்கடியாக தெரியும் .

ஆனால் அவ்வளவு அச்சம் அவசியம் இல்லை போட்டிதேர்வாளர்களே தங்கங்களே, நமது விருப்ப விளையாட்டில் தங்கம் பெற பயிற்சிப்பதுபோல், பேச்சுபோட்டிக்கு முதல் பரிசுபெற யுக்திகளை கையால்வது வழக்கம் அவ்வாறே தேர்வில் வெற்றிபெற உங்களுக்கான சில எளிய வியூகங்ள் போட்டிதேர்வாளர்களே ,,,,,, தேர்வுக்கும் சில சிறப்பு திட்டமிடல் வேண்டும்.

அதென்ன சிறப்பு திட்டமிடல் ?


தேர்வு சிறக்க செய்ய வகுக்கும் சில யுக்திகள் வகுக்க வேண்டும் இதனை ஸ்மார்ட் வொர்க் (Smart Work) என்பர் .

எளிய யோகா : எளிய யோக மாணவர்களின் கவனசிதறலுக்கு உதவியாக அமையும் எளிய யோகா இதனை எப்பொழுதும் செய்யலாம்.

இதோ உங்களுக்கான ஹாக்கிணி முத்திரா மற்றும் மூளை செயல்ப்பாட்டை ஊக்குவிக்க தோப்புகரணம் போடலாம்.

உடல்சோர்வைத்தடுக்க கை விரல்களை பூ மொட்டுபோல் சுருக்கி ஐந்து நிமிடங்கள் முகுள முத்திரை செய்தால் போதும்.

நேரமேலாண்மை : நேர மேலாண்மை என்பது தேர்வு காலங்ளில் அவசியமானது.

ஒருமணிநேரத்திற்கு ஒருமுறை ஐந்து நிமிட இடைவெளி அவசியம் அப்பொழுது ஏற்படும் சோர்வை தவிர்க்க முகுள முத்திரை செய்யலாம் .

சுயபரிசோதனை செய்ய வேண்டும் நேர அளவீடுகளை குறித்து அலாரம் வைத்து இலக்குகளை எளிதில் அடையலாம் இது நேர விரையத்தை குறைக்கும்.

சுய விழிப்புணர்வு அதிகரிக்கசெய்யும் .

முன்னுரிமை : பாடங்களின் மேலுள்ள ஆர்வங்கள் பொருத்து முன்னுரிமை வேறுபடும்.

கடினமான பாடங்களை சரியாக கையாள வேண்டியது அவசியம் நேரமும் சிறப்பு பயிற்சிவகுப்புகள் மூலம் பாடத்தை எளிது படுத்த வேண்டும்.

சிறப்புகவனம் செலுத்த வேண்டும் .

ஒருமுறை படித்துபின்பு மீண்டும் அதே நாளில் இருமுறை படிக்க வேண்டும் .

அதே வாரத்தில் ஒருமுறை மற்றும் அந்த மாதத்தில் ஒருமுறையென திரும்ப திரும்ப படித்ததை நினைவுகூர்ந்து நியாபகத்திறனை பலப்படுத்தலாம.

நல்ல ஒய்வு தூக்கத்துடன காலர நடக்க அழுத்த தன்மை குறையும் .

மனஈடுபாட்டோடு செயல்பட்டால் வெற்றி உறுதி.

திணைபயிர்கள் உணவு, சூரியவொளியிலிருந்து பெரும் வைட்டமின் டி, அளவான ஆகாரம் உட்கொள்ளல் இவையனைத்தும் அவசியம் ஆகும் .

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைசெல்வங்கள் நலங்கருதி செயல்படவேண்டும்.

அக்கறையுடன் கல்விகற்கும் சூழல் ஏற்ப்படுத்தி தரவேண்டும் .

கடிகார அலார உதவியுடன் திட்டமிடலின் படி நாம் செயல்படுகிறோமா என்பதை இரண்டு மணி நேரத்திற்கொருமுறை பரிசோதித்து குறைகளை நிவர்த்தி செய்து வெற்றிபெறுவோம் .
#TNPSC #YOGA #EXAM #TIPS

.

Post a Comment

0 Comments