Saturday, February 8, 2020

களவழி நாற்பது (பதினெண்கீழ்க்கணக்கு நூல்) | tamil noolgal - kalavali narpathu

TNPSC தேர்வில் தமிழில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க உதவும் விதமாக தமிழில் உள்ள நூல்களைப் பற்றிய குறிப்புகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் தமிழ் பழ நூல் ஆன களவழி நாற்பது குறித்து முழுமையான தகவல்கள் இங்கு கொடுத்துள்ளோம். படித்துப் பயன்பெறுக. 


பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே நூல் களவழி நாற்பது. சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் இடம் பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந்நூல்.


இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர். இவர் சேர மன்னனுடைய நண்பன். நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதி ஆகிறான்
. அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந் நூல் எனக் கருதப்படுகின்றது.

இதிலுள்ள நாற்பது பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது படைகளும் புரிந்த வீரப் போர் பற்றியும் கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன.

இந்நூலிலுள்ள மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் குறிப்பிடப்படுவது அக்காலத்தில் போர்களில் யானைப் படைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது எனலாம்.

களவழி: 

 நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது 'ஏரோர் களவழி'. பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது 'தேரோர் களவழி'  தேரோர் களவழியைப் பாடும் நூல் களவழி நாற்பது.

இந்தக் களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே தருகிறது. கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் செய்கிறது.

சோழ மன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டான் என்றும், புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது.


போர்க்களம்:


போர் 'திருப்போர்ப்புறம்|திருப்பூர்' என்னுமிடத்தில் நடைபெற்றதாகப் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது.

களவழி நாற்பதுக்கு உரை எழுதியோர் கழுமலம் என்னும் என்னும் ஊரில் நடைபெற்றதாகக் குறிப்பிடுகின்றனர்.

புறநானூற்றுக் கணைக்கால் இரும்பொறை சிறைச்சாலையில் உயிர் துறந்தான்.

களவழி நாற்பது நூலின் கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்து மீட்கப்பட்டான்.

உதாரணம் :

சினங்கொண்ட சோழன் செங்கணான் போர் புரிகின்ற களத்திலே, தச்சனுடைய தொழிற்சாலையில் பொருட்கள் இறைந்து கிடப்பதைப்போல, கொலைவெறி கொண்டு பாய்கின்ற யானைகள் புகுந்த இடமெல்லாம் பிணங்கள் விழுந்து கிடக்கின்றன என்னும் பொருள்படுவது கீழே காணப்படும் பாடல்.

கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்

புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன்

வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட்"

சினமால் பொருத களத்து.

#tamil #ilakkiyam #tnpsc

No comments:

Post a Comment