Skip to main content

வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கி கொண்டிருப்பவரா? அப்படியானால் இது உங்களுக்குத்தான் !

வருடந்தோறும் அரசாங்க வேலைவாய்ப்பும், அரசு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எண்ணற்ற பட்டதாரிகள் அரசு வேலைக்காக அயராது உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் நம்மில் எத்தனை பேர் முதல் முயற்சியில் வெற்றி பெறுகிறார்கள். மத்திய, மாநில, ரயில்வே, ssc, psc , upsc மற்றும் வங்கி வேலைகளுக்கு வருடந்தோறும் காலி இடங்கள் இருந்தாலும் நம்மால் ஏன் அதை எதிர்க்கொள்ள முடியவில்லை.

இதற்கு காரணம் ஒழுங்கான தேர்வு தயார் நிலையை நாம் கடைபிடிக்காதது தான். இனியும் இப்படி இருக்க வேண்டுமா, இதோ வெற்றிக்கான ரகசியம் இங்கே.


1. வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்வது எப்படி?

அரசு வேலைக்கான(Govt. Jobs) முதற்படியாக அனைவரும் செய்வது வாரந்தோறும் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்தித்தாள்களை வாங்குவது. இந்த நவீன இன்டெர்நெட் யுகத்தில் அனைத்து தகவலையும் தெரிந்து கொள்ள வாரக்கடைசி வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தந்த இலாக்காக்களுக்கான அறிவிப்பு வெளியானவுடன் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தனியார் வலைத்தளமான (recruitment.guru) உதவுகிறது.

இது மட்டுமின்றி ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்கும் இணையதளம், விண்ணப்பிக்கும் கடைசிநாள் என அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.

2. திட்டமிட்ட பயிற்சி விண்ணப்பித்தவுடன் நம்மில் பலரும் செய்யும் தவறு, தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு படித்து தயார் செய்து கொள்ளலாம் என்பது. இது மிகவும் தவறான அணுகுமுறை. முதலில் அந்த தேர்வுக்கான பாடத்திட்டம்(Exam Syllabus) மற்றும் மதிப்பெண் முறையை தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

பிறகு இதனை பயன்படுத்தி தேர்வு கால அட்டவணை உருவாக்க வேண்டும். பெரும்பாலும் அரசு தேர்வுக்கான(Sarkari Naukri) பாடத்திட்டங்கள் அனைத்தும் சிறு வயது முதல் டிகிரி வரை பயின்ற வகையாகத் தான் இருக்கும். ஆகையால் அதற்காக தினமும் சில மணி நேரங்களை ஒதுக்கினால் போதும். Quantitative Aptitude, Reasoning மற்றும் Numerical ability அனைத்திற்கும் அடிப்படையானவை சூத்திரங்கள்.


எனவே தினமும் பயிற்சியை ஆரம்பிக்கும் முன் சூத்திரங்களை நினைவுப்படுத்துதல் இன்றியமையாதது. பிறகு இதர பாடங்களுக்கான தேர்வு நாளை பொறுத்து அட்டவணையை மேற்கொள்ளுங்கள். உதாரணமாக 5 பாடங்களுக்கு 60 நாட்கள் இருக்குமேயானால் ஒரு பாடத்திற்கு 10 முதல் 12 நாட்கள் செலவிட வேண்டும். எந்தவொரு பகுதியையும் அலட்சியமாக விட்டுவிடாமல் அனைத்தையும் நிதானமாக படியுங்கள்.

3. மாதிரி வினாத்தாள்கள் அனைத்து பாடங்களையும் படித்து முடித்த பின் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும். முன்னதாக கூறியது போல் முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களும்(Previous Year Question Papers) மற்றும் வினாத்தாள்களுக்கான விடைகளும் மேலே உள்ள வலைதளத்தில் அமைந்துள்ளது. முடிந்தவரை அனைத்து ஆண்டு கேள்வித்தாள்களையும் முயற்சி செய்து பாருங்கள்.

மேலும் பல்வேறு இணையதளங்கள் மாதிரி தேர்வுகளையும்(Mock Test) நடத்துகின்றன. இவை அனைத்தையும் பயிற்சி செய்தால் வெற்றி என்பது மிக அருகில் கிட்டும்.

4. கூடுதல் திறமைகள் இன்று உலகமே கணினி மயமாகிவிட்டது. அதில் அரசு அலுவலகங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. ஆகையால் அனைத்து விண்ணப்பதாரர்கள் மத்தியில் தங்களுடைய தனித்திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுதல் என்பது அவசியம் ஆகிறது. தட்டச்சு(type writing), கணினி பயன்பாடு மற்றும் அந்தந்த துறைகளுக்கு சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்வது மிக முக்கியமானது.

எடுத்துக்காட்டாக தற்காலிக நிகழ்வுகளை(current affairs) விரல் நுனியில் வைத்துக் கொள்ள வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், பொது அறிவிற்கும், தற்காலிக நிகழ்வுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. தினமும் 30 நிமிடங்கள் இதற்கு ஒதுக்க வேண்டும்.

5. மனவலிமை மற்றும் உடல்வலிமை "சுவர் இல்லையேல் சித்திரம் இல்லை" என்பது போல கடைசியாக இருக்கும் இந்த விஷயம் மேற்கூறிய எல்லாவற்றிலும் மேலான ஒன்று. எவ்வளவு தான் தயார் செய்து இருந்தாலும் அந்த 2 மணி நேரத்தில் தாங்கள் தயார் செய்தவற்றை எந்த பதட்டமும் இல்லாமல் வெளிப்படுத்த வேண்டும். எத்தனையோ பேர் இந்த திறமையை வளர்க்க தவறிவிடுகிறார்கள்.

24 மணி நேரமும் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லதல்ல. ஏன் என்றால் அது மன அழுத்தத்தையும், பயத்தையும் உருவாக்கும். அதனால் தினமும் சிறிது உடற்பயிற்சியும், தியானமும் மேற்கொள்ளுங்கள். இது கவனத்தை ஒருநிலை படுத்த உதவும். பிறகு தேர்வு என்பது பெரிய பிரச்சனையாக இருக்காது.

நீங்கள் எதிர்ப்பார்த்த தேர்வு முடிவுகளை (sarkari result )காணலாம். "முயற்சி திருவினையாக்கும்" என்ன நண்பர்களே, எல்லா குறிப்புகளையும் படித்துவிட்டீர்களா? இனி நீங்கள் இதை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்.


Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar