நடப்பு நிகழ்வுகள் 2019

நடப்பு நிகழ்வுகள்- டிசம்பர் -2018

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்காக, கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 11ம்தேதி தொடங்கப்பட்ட முதல்வரின் விரைவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், வழங்கப்பட்ட அரசு மருத்துவக் காப்பீட்டுத்தொகை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகளுக்கான அவசர நிதியமானது (UNICEF – United Nations International Children’s Emergency Fund)குழந்தைகளின் உரிமைகளுக்காக போராட வடகிழக்குப் பிராந்தியத்திற்காக முதல் இளைஞர் பரப்புனராக அசாம் பிரபல பாடகியான நஹீத் அப்ரின் என்பவரை நியமித்துள்ளது.

தீனதயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ்  (DAY – NULM/Deendayal Antyodaya Yojana. National Urban Livelihoods Mission) கடன்களை விரைவாக செயலாக்கம் செய்வதற்காக, வீ ட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங் களுக்கான மத்திய அமைச்சகமானது, மலிவான கடன் வசதி மற்றும் வட்டி உதவித் தொகை அணுகலுக்காக (PAiSA)பைசாஎன்ற மின்னணு தளத்தை புது டெல்லியில் நடைபெற்ற மாநகராட்சி நிதி மற்றும்  நகர்புற திட்டமிடல் மீதான தேசிய பட்டறையின் போது தொடங்கப்பட்டது.

PAiSA – Portal for Affordable Credit and Interest Subvention Access


மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் (2018-19) 2-வது காலாண்டில் 7.1 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.


மத்திய  வருவாய் துறையின்  புதிய  செயலாளராக  அஜய்  பூஷண்   பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார் .

தெற்கு  ஆசிய  பிராந்திய  இளைஞர்கள்  அமைதிமாநாடு( ‘South  Asia  Regional  Youth Peace  Conference’)    28-30 நவம்பர் 2018  தினங்களில்  புது டெல்லிநடைபெற்றது.

13  வது  ‘ஜி-20’  உச்சி  மாநாடு  (2018  G20  Buenos  Aires  summit) , அர்ஜென்டினா  நாட்டின் தலைநகரான  பியூனோஸ் அயர்ஸ்  30  நவம்பர்   2018  அன் று தொடங்கியது.


உலக எய்ட்ஸ்   தினம்  -  டிசம்பர்  1

மையக்கருத்து(2018)  -  உங்கள்  நிலையை அறிந்துகொள்ளுங்கள் (“Know your status”)

சர்வதேதச பாலஸ்தினிய மக்கள் ஒருமைப்பாட்டு தினம்- நவம்பர்  29

Post a Comment

0 Comments