Saturday, June 8, 2019

TNPSC Group IV Tamil Tips | தமிழ் பாடக்குறிப்புக்கள்

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
- பாஞ்சாலி சபதத்தின் ஐந்து சருக்கங்கள் - சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம்

- பெண்களின் ஏழு பருவங்கள் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்

- எட்டுத்தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

- நவரத்தினங்கள் - மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம், கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம்

- நவதானியங்கள் - நெல், துவரை, பச்சைப்பயறு, உளுந்து, எள், அவரை, கடலை,கொள்ளு, கோதுமை

- ஆண்பால் பிள்ளைத்தமிழ் 10 பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி,

  முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

- பெண்பால் பிள்ளைத்தமிழ் 10 பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, 

  முத்தம், வருகை, அம்புலி, அம்மாணை, கழங்கு, ஊசல்

- புறத்திணை - வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை,

  வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை,பெருந்திணை

- தொல்காப்பிய அகப்பொருள் கோட்பாடுகள் - முதல் பொருள், கருப்பொருள், உரிப்பொருள்

- இரட்சண்ய யாத்திரிகத்தின் ஐந்து பருவங்கள் - ஆதிபருவம், குமாரப் பருவம், நிதான  பருவம், ஆரண்யப் பருவம், இரட்சண்ய பருவம்

- இராவண காவியத்தின் ஐந்து காண்டங்கள்  - தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம்,விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம்

- மூவகை மொழிகள் - தனிமொழி, பொதுமொழி, தொடர்மொழி

- உறுதிப் பொருள்கள் - அறம், பொருள், இன்பம், வீடு

- திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி

- தேவாரம் பாடிய மூவர் - சம்பந்தர், அப்பர், சுந்தரர்

No comments:

Post a Comment