Sunday, November 15, 2020

டிஎன்பிஎஸ்சி பொது அறிவு – கேள்வி பதில்கள் பகுதி - 33

tnpsc gk questions

பொது அறிவு
செல்லின் அமைப்பு
செல்லின் வகைப்பாடுகள் :

  - தாவரம், விலங்கு-இரண்டுக்கும் செல்கள் ஒரே மாதிரியாக இல்லை.

பாக்டீரியா (Bacteria),சில பாசிகள் போன்றவை ஒரே செல்லினால் ஆனவை.

இவற்றின் செல்களின் உள்ளே சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை.

tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-34

- சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்ட செல்லை விஞ்ஞானிகள் புரோகேரியாட்டிக் செல் என்று அழைக்கிறார்கள். இது எளிய செல்.எ.கா. பாக்டீரியா.



- செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும் கொண்ட செல் யூகேரியாட்டிக் செல், அதாவது முழுமையான செல் என்பர். தாவர, விலங்கு செல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.

- தாவர மற்றும் விலங்கு செல்கள் ஒரே மாதிரியானவை அல்ல. அவை அவற்றின் பணிகளுக்கு ஏற்ப அளவிலும், வடிவத்திலும் வேறுபட்டாலும் அடிப்படை அமைப்பில் ஒத்து காணப்படுகின்றன.

விலங்குசெல் :

பிளாஸ்மா படலம் (Plasma membrance) :

- செல்லைச் சுற்றியுள்ள படலம் பிளாஸ்மா. பிளாஸ்மா செல்லுக்குப் பாதுகாப்பான படலம். இது பொருள்கள் செல்லுக்குள் செல்வதையும், வெளியேறுவதையும் கட்டுப்படுத்தும்

புரோட்டோபிளாசம்(Protoplasm):

- பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கக் கூடியது புரோட்டோபிளாசம். இந்தச் செல்சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது புரோட்டோபிளாசம் ஆகும்.

- புரோட்டோ என்றால் முதன்மை என்றும், பிளாசம் என்றால் கூழ் போன்ற அமைப்பு என்றும் பொருள்.

சைட்டோபிளாசம் (CytoPlasm)

- பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட புரோட்டோ பிளாசத்தின் பகுதி . இது கார்போஹைட்ரேட், புரதத்தால் ஆனது. என்னுள் செல்லின் உள்ளுறுப்பு உறுப்பினர்கள் மற்றும் கொழுப்புத் துளிகளும் உள்ளன.

உட்கரு ( நியூக்ளியஸ்-Nulecus) :

- உட்கரு செல்லின் முக்கியப் பகுதி. எனவே செல்லின் கட்டுப்பாட்டு மையம் ஆகும். ஆனால், செல்லில் நடுவில்தான் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.

-   இதன் வடிவம் கோள வடிவம். உட்கருச்சாறு, உட்கருச் சவ்வு, உட்கரு மணி

(நியூக்ளியோலஸ்-nucleolus), குரோமேட்டின் வலைப் பின்னல் ஆகியன எனக்குள் அடக்கம். ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்கிறது.

மைட்டோகாண்ட்ரியா (Mitochondria)

- இது செல்லின் சுவாசம் . நாம் சாப்பிடும் உணவை ஆற்றலாக மாற்றும் வேலையை இது செய்கிறோம். இதற்கு ஒய்வே கிடையாது. "செல்லின் ஆற்றல் மையம்" (power house of the cell) என்று எங்களை அழைக்கப்படும்.

கோல்கை உறுப்புகள் (Golgi bodies):

- உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவதும் இதன் வேலை. நாம் உண்ணும் உணவிலிருந்து புரதச் சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும், உங்கள் உடலுக்கும் வலு சேர்ப்பது கோல்கை உறுப்புகள் தான். தாவர செல்லில் இதை டிக்டியோசோம்கள் என்பர்.

எண்டோபிளாச வலை (Endoplasmic reticulum) :

- செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்கிறது.

ரிபோசோம்கள்(Ribosomes)

-  "செல்லின் புரதத்தொழிற்சாலை"என்று இதற்கு பெயர். புரதத்தை உற்பத்தி செய்வது தான் இதன் வேலை.

லைசோசோம்கள் (Lysosomes) :

-  நுண்குழல்கள் போன்ற அமைப்பை கொண்டது. செல்லைப் பாதுகாத்தல் இதன் பணியாகும். இதன் பெயர் லைசோசோம்கள். உள்ளே நுழையும் நுண்கிருமிகளை உயிரைக் கொடுத்தாவது கொல்லும். "செல்லின் தற்கொலைப் பைகள்" என்று இதற்கு பெயர். இதைத் தவிரச் செரித்தலையும் இதன் பணியாகச் செய்ய வேண்டியிருக்கும்.

சென்ட்ரோசோம் (Centrosome):

- இது விலங்கு செல்லில் மட்டுமே இருக்கும். உட்கருவிற்கு அருகில் நுண்ணிய குழல் மற்றும் குச்சி வடிவில் இருக்கும். இதனுள் சென்ட்ரியோல்கள் உள்ளன. செல் பிரிதல்-அதாவது புதிய செல்களை உருவாக்குவதுதான் இதன் வேலை.

நுண் குமிழ்கள் (Vacuoles):

- இது வெளிர்நீல நிறமுடைய குமிழ்கள் போல் இருக்கும். இதன் வேலை சத்துநீரைச் சேமிப்பது, செல்லின் உள் அழுத்தத்தை செல்லின் உள் அழுத்தத்தை ஒரே மாதிரி பேணுவது.

தாவர செல்

tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-34



- ஒரு தாவரசெல் எவ்வாறு விலங்கு செல்லிலிருந்து வேறுபட்டுள்ளது என்பதை ஆராயும் போது.

- தாவர செல்லில் சென்ட்ரோசோம் இல்லை.

-  தாவரசெல்கள் அனைத்திலும் செல்சுவர் உள்ளது.

-  விலங்குகளைவிட தாவரங்கள் இறுகி இருப்பதற்குக் காரணம். தாவரசெல்லில் செல்சுவர் இருப்பதாகும்.

- அவைகளில் கணிகங்கள் உள்ளன.

- அவைகளில் அளவில் பெரிய நுண்குமிழ்கள் உள்ளன.

செல்சுவர்:

-  செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை செல்சுவர். இது செல்லுலோசினால் ஆனது. இதன் பணி, செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பது, செல்லுக்கு வடிவம் தருவது.

கணிகங்கள் (Plastid)

- இது தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு ஆகும். இவைகளில் நிறமிகள்

காணப்படும். நிறமிகளின் அடிப்படையில் இவற்றை மூன்றாகப் பிரிக்கலாம்.

1. குளோரோபிளாஸ்ட் (பசுங்கணிகம்)

2. குரோமோபிளாஸ்ட

3. லியூக்கோபிளாஸ்ட



தாவர செல் விலங்கு செல்

- செல்சுவர் உண்டு செல்சுவர் இல்லை

-  கணிகங்கள் உண்டு கணிகங்கள் இல்லை

- சென்ட்ரோசோம் இல்லை சென்ட்ரோசோம் உண்டு

-  நுண் குமிழ்கள் அளவில் பெரியவை நுண் குமிழ்கள் அளவில் சிறியவை

No comments:

Post a Comment