குரூப் II தேர்வு பொருளாதார பாடக்குறிப்புகள்

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வினை வெல்ல   பொது அறிவுப் பகுதியினை வெல்ல  பொருளாதார பகுதியினைப் படிக்க வேண்டும்.

தமிழக அரசின் மக்களுக்கு உதவும் திட்டங்கள் முழுமையாகப் பயன்படுத்த மங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பெண்கள் நலத்திட்டங்களை குறித்த அறிவோம்.

மூவலூர் ராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் : 1989  ஆம் ஆண்டு  ஜூன் மாதம் துவங்கப்பட்டத்திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்ணுக்கு திருமண நிதியுதவி வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு வரை முடித்த பெண்களுக்கு ரூபாய் 25,000 ரூபாயும் மற்றும் 4  கிராம்  தங்க நாணயம வழங்கப்படுகிறது. இளங்கலை பட்டம் வரை படித்து  முடித்த பெண்களுக்கு ரூபாய் 50,000 மற்றும் 4 கிராம் தங்க நாணையம் வழங்கப்படுகிறது.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 24000 மிகாமல் இருப்பவர்களுக்கு 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

பெண்களின் வயது 18 முதல் 30 வயது ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண்ணிற்கு மட்டுமே வழங்கப்படும்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்: விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு அவர்களின்  மறுமணத்திற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் ஆகும்.

பெரியார் ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் 1981 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது இத்திட்டத்தின் மூலம் வறுமையில் வாடும் விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமணம் செய்ய நிதியுதவி தமிழக அரசிடம் விண்ணப்பித்து பெறலாம்.

அன்னை தெரசா நினைவுத் திருமண உதவித் திட்டம்: 
குடும்பம் மற்றும் பிற ஆதரவுகளின்றி வாழும் பெண்களுக்கு அவர்களின் திருமணம்  செய்ய உதவுவதாகும்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகபேறு உதவித்திட்டம்: 
1986 -இல் அறிமுகப்படுத்தப்பட்டது இத்திட்டத்தின் கீழ் கருவுற்ற ஏழைத் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கும் திடட்ம் ஆகும். இது டாக்டர் முத்துலெட்மி ரெட்டி அவர்களின் கலப்புத் திருமண உதவித்  திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: 
பெண் கல்வியை மேம்படுத்தவும் பெண் சிசுகொலையை ஒழிக்கவும் 1992இல் பெண்குழந்தை பாதுகாப்புய திட்டம் அப்பொழுதைய முதலவர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டது.

1997 இல் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் எனப் பெயர் பெற்றது தற்பொழுது இத்திட்டம் முதலமைச்சரின் பெண்  குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் பெயரிடப்பட்டது முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் எனப் பெயர்  மற்றம் செய்யப்பட்டுள்ளது.

 இத்திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு  திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஒரு பெண் குழந்தைக்கு ரூபாய் 50,000 இரண்டு பெண் குழந்தைகளுக்கு தலா ரூபாய் 25,000 ரூபாயும் வழங்கப்படும்.

தொட்டில் குழந்தை திட்டம்: 
1992 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் சமூகப் பொருளாதார நிலை காரணமாகப் பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளைக் காக்க அரசு மருத்துவமணைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் காப்பங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் மூலம் பெண் குழந்தைகள் பெண்சிசுக் கொலையிலிருந்து பாதுகாபக்கப்படுகின்றன.

ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்கள்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி தீண்டாமை ஒழிக்கவும், ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடைச்சட்டம் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன.

மாற்று திறனாளிகள் நலத்திட்டம்: 
உடல் ஊனமுற்ற குழந்தைகள் கல்வி பெற மாநிலம் முழுவதும் 25 சிறப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இலவச கல்வி, உணவு, உறைவிடம், உதவித் தொகை போன்றவை வழங்கப்படுகிறது.

கலவி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் ஊனமுற்றோர்களுக்கு தமிழக அரசு மூன்று சதவீகித இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

1992 இல்  மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு இயக்குநரகம் உருவாக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில்  பதிவு செய்து ஓராண்டு பூர்த்தியான மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பும் அதற்க்குக் கீழும் உள்ள கல்வித் தகுதியை பதிவு செய்துள்ளவர்களுக்கு முறையே ரூபாய் 375 மற்றும் 450 ரூபாய்களும் வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments