Monday, November 20, 2017

குரூப் 2 நேர்முகத்தேர்வு இலவச பயிற்சி !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 'குரூப் 2' நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம் சென்னையில் நவம்பர் 26-ம் தேதி நடக்கிறது.

விகடன் பிரசுரம் மற்றும் அப்போலோ பயிற்சி மையம் சார்பில், சென்னையில் நவம்பர் 26-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி நடத்தும் 'குரூப் 2' நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம், (ஞாயிற்றுக்கிழமை) எத்திராஜ் மகளிர் கல்லூரியில் காலை 9.30 மணி முதல் 2 மணி வரை நடைபெறுகிறது.

செங்கல்பட்டு சார் -ஆட்சியர் வி.பி.ஜெயசீலன் ஐ.ஏ.எஸ்., எஸ்.சரவணகுமார் ஐ.ஆர்.எஸ்., போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர் டாக்டர் சங்கர சரவணன், அப்போலோ பயிற்சி மையத்தின் இயக்குநர் சாம் ராஜேஸ்வரன் ஆகியோர் பயிற்சி அளிக்கிறார்கள்.

தமிழக அரசுப் பணியில் 1,241 அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் குருப் 2 முதல்நிலைத் தேர்வு 2015-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி நடந்தது. இந்தத் தேர்வில் லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, இரண்டாவது கட்டமாக 21.08.2016 என்று மெயின் எழுத்து தேர்வு நடந்தது. இந்த மெயின் தேர்வு முடிவுகளை 27.09.2017 அன்று தேர்வாணையம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இப்போது, மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாக நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது.

அதன் பின்னர்தான், இந்தத் தேர்வில் வெற்றி பெற்றோரின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இந்த நேர்முகத்தேர்வுக்கு 40 மதிப்பெண்கள் உள்ளன.

நேர்முகத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம் குறித்து, அப்போலோ பயிற்சி மையத்தின் இயக்குநர் சாம் ராஜேஸ்வரன் கூறுகையில், ''துணை வணிக வரித்துறை அதிகாரி, சார்-பதிவாளர் உள்பட 18 பதவிகளில் 1,241 பேரை தேர்வு செய்வதற்கான மூன்று கட்டத் தேர்வில் இரண்டு தேர்வுகள் முடிவடைந்துவிட்டது.

இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு, போட்டியாளர்களின் பதவி நிலைகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே, மிக முக்கியமான இந்த நேர்முகத்தேர்வை எளிதாக எதிர்கொண்டு அதிக மதிப்பெண் எடுக்க உதவிடும் வகையில் இலவசப் பயிற்சி முகாம் வரும் 26-ம் தேதி சென்னையில் விகடன் பிரசுரத்துடன் இணைந்து நடத்துகிறோம்.

இந்தப் பயிற்சி முகாமில், நேர்முகத் தேர்வு குறித்த யுக்திகள் சொல்லித்தரப்படும். இந்தப் பயிற்சி முகாம் முன்பதிவுக்கான படிவத்தை http://books.vikatan.com, www.appolotraining.com  ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து அதன் வழிகாட்டுதலின்படி முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 7 மணி  வரை 97899 77822, 73580 59903, 95000 68144, 044-2433 9436 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

பயிற்சி முகாமில், செங்கல்பட்டு சார் -ஆட்சியர் வி.பி.ஜெயசீலன் ஐ.ஏ.எஸ்., எஸ்.சரவணகுமார் ஐ.ஆர்.எஸ்., போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர் டாக்டர் சங்கர சரவணன் மற்றும் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற டாப்பர்கள் தங்களுடைய நேர்முகத்தேர்வு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். மாதிரி நேர்முகத்தேர்வு, நேர்முகத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகளும் தரப்படும்.

நேர்முகத் தேர்வுக்கு என்னென்ன படிக்க வேண்டும், இப்போது நேர்முகத்தேர்வு நடைபெறும் 18 அரசு துறைகளின் அமைப்பு முறைகள், நடப்பு செய்திகள் போன்றவை குறித்து முக்கிய குறிப்புகள் சொல்லித்தரப்படும்'' என்றார்.

நேர்முகத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயனடையுங்கள். வாழ்த்துகள்..!

1 comment: