குரூப் - 1 விடைத்தாள் லீக் விவகாரம்; சி.பி.சி.ஐ.டி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 1 தேர்வின், விடைத்தாள் வௌியான விவகாரத்தில், மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி, சி.பி.சி.ஐ.டி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குரூப் - ௧ பணிகளுக்கான அறிவிப்பை, 2015ல், டி.என்.பி.எஸ்.சி., வௌியிட்டது. 68 பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது. தேர்வின் விடைத்தாள் ெவளியானதாகவும், அதனால் தேர்வை ரத்து செய்து, மீண்டும் முறையாக நடத்த கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், மதுரையை சேர்ந்த திருநங்கை சுவப்ணா, மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த, நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம், விடைத்தாள் வௌியானது குறித்து விசாரித்து, அறிக்கை அளிக்கும்படி, போலீசுக்கு உத்தரவிட்டிருந்தார். போலீஸ் தரப்பிலும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணைக்கு, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது. டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் ஒத்துழைத்தால், நான்கு வாரங்களில், விசாரணையை முடிப்பதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைப்பதாக, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ”அரசு நிர்வாகத்திலும், பணியாளர்கள் தேர்வு முறையிலும், வௌிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக, யாரிடமும் விசாரணை நடத்தலாம். அதில், நீதிமன்றம் தலையிடாது,” என்றார்.

வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், டி.என்.பி.எஸ்.சி., வழங்கும்படியும், விரிவான விசாரணை நடத்தி, மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும், சி.பி.சி.ஐ.டி.,க்கு, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, வரும், 29க்கு தள்ளிவைத்தார்.

Post a Comment

1 Comments


  1. Top ias coaching centers in bangalore
    http://www.globalias.in/top-ias-coaching-center-in-bangalore-india/

    ReplyDelete