Thursday, February 9, 2017

இந்திய அஞ்சலகம் | TNPSC GK

இந்திய அஞ்சல் துறை 1854-ல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலகட்டத்தில் இந்திய அஞ்சலகச் சட்டம் கொண்டுவரப்பட்டுத் தொடங்கப்பட்டது. இன்று இந்திய அஞ்சல் துறை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அதன் கிளைகளில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் உலகின் மிகப் பெரிய அஞ்சல் துறையாக வளர்ந்துள்ளது. 1880-ம் ஆண்டு பணப் பரிமாற்ற (money order) திட்டமும் 1882-ல் சேமிப்புத் திட்டமும் தொடங்கப்பட்டு அஞ்சல் துறை சேவையை விரித்துக்கொண்டது.

இந்திய ரிசர்வ் வங்கி, பேமண்ட் பேங்க்ஸ் (Payments banks) என்னும் புதிய வங்கியை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஏர்டெல், பேடிஎம் போன்ற நிறுவனங்கள் பேமண்ட் பேங்க் அனுமதியைப் பெற்றன. 2015-ம் ஆண்டு இந்திய அஞ்சல் துறைக்கும் பேமண்ட் வங்கிக்கான கொள்கை அளவிலான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியது. கடந்த வாரம் ரிசர்வ் வங்கி இந்திய அஞ்சல் துறைக்குப் பேமண்ட் வங்கிக்கான இறுதி உரிமத்தை வழங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்னும் 650 பேமண்ட் பேங் கிளைகளை அஞ்சல் துறை தொடங்கவுள்ளது. பேமண்ட் வங்கிகள் தனிநபரிடமிருந்து ரூ.1 லட்சம் வரை வைப்பு நிதியை வைத்திருக்க முடியும். ஏடிஎம் கார்டுகள், டெபிட் கார்டுகள், இணையப் பரிமாற்றம், மொபைல் வங்கிச் சேவை போன்ற சேவைகளை வழங்க முடியும். ஆனால் கடன், கிரெடிட் கார்டு போன்ற சேவைகளை வழங்க முடியாது.

No comments:

Post a Comment