டிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 21

கிருஷ்ண தேவராயர் அவைக்கவிஞர் யார்?
அல்லசாணி பெத்தண்ணா

குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
ஹீணர்களின் படையெடுப்பு

குப்தப் பேரரசை ஏற்படுத்தியவர் யார்?
முதலாம் சந்திரகுப்தர்

குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யார்?
பாஹியான்


குப்தர் காலத்தில் மிகவும் சிறந்து விளங்கியவை எவை?
கலை- இலக்கியம்- அறிவியல்

குப்தர்களின் தலைநகரம் எது?
பாடலிபுத்திரம்

ஹாலோஜென்களில் வீரியமிக்க ஆக்ஸிஜனேற்றி எது?
பு@ரின்

ஹேபர் முறையில் அமோனியா தயாரிக்கும்போது ஹைட்ரஜன் வாயுவின் நச்சு எது?
கார்பன் மோனாக்சைடு

ஹைட்ரஜனின் ஐசோடோப்புகளில் கதிரியக்கத் தன்மை வாய்ந்தது எது?
டிரிடியம்

அஜந்தா ஓவியங்களைப்போல் தமிழகத்தில் ஓவியங்கள் காணப்படும் இடம் எது?
சித்தன்னவாசல்

ஸ்டார்ச்சை மால்ட்டோஸாக மாற்றும் நொதி எது?
டயஸ்டேஸ்

அக்பர் நாமா நூலை எழுதியவர் யார்?
அபுல்பாசல்

அரபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய மருத்துவ நூல்கள் எவை?
சுஸ்ருதம்ää சரகசம்ஹிதை

சாகாரி என்று இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பெயர் வந்த காரணம் என்ன?
சாகர்களை வென்றதால்

சாகுந்தலத்தை இயற்றியவர் யார்?
காளிதாசர்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்த அரசன் யார்?
பராந்தக சோழன்

இந்தியாவில் சுமார் எத்தனை சரணாலயங்கள் உள்ளன?
500

சிவபாரத சேகரன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
ராஜராஜ சோழன்

சீக்கிய மதத்தை நிறுவியவர் யார்?
குருநானக்

சீக்கியரின் வேதப்புத்தகம் எது?
ஆதிகிரந்தம்

இந்திய வரலாற்றை எழுதி வைத்த சீனப்பயணி யார்?
பாஹியான்

இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியின் விளைவாகத் தோன்றிய மொழி எது?
உருது

இந்தியாவிற்கு முதலில் வந்த முஸ்லீம்கள் யார்?
அராபியர்கள்

இரண்டாம் சந்திரகுப்தரது அரசவைக் கவிஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
நவரத்தினங்கள்

இரண்டாவது பானிபட் போர் எப்போது நடைபெற்றது?
கி.பி.1556ம் ஆண்டு

உருதுமொழியில் சிறந்து விளங்கியவர் யார்?
அமீர்குஸ்ரு

ஒளரங்கசீப்பால் சிரச்சேதம் செய்யப்பட்ட சீக்கிய மதகுரு யார்?
தேஜ்பகதூர்

புறாவின் உடலைத் தாங்கிப் பிடிப்பவை எவை?
ஓரிணைக்கால்கள்

புறாவின் உடற்பகுதி எத்தனை செ.மீ இருக்கும்?
சுமார் 33 செ.மீ

விஜயநகர பேரரசின் அழிவின் சின்னங்களாக காணப்படும் இடம் எது?
ஹம்பி

புறாவின் உணவு மண்டல நடுகுழல் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
மீசென்ட்ரான்

மாமல்லன் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
நரசிம்ம பல்லவன்

Post a Comment

0 Comments