Wednesday, February 1, 2017

டிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 13


  •  1848-ல் டல்ஹவுசி பிரபு இந்தியாவில் பதவி வகித்த தலைமை ஆளுநர்களிலேயே இளைய வயது உடையவராயிருந்தார்.
  • இந்தியாவில் நவீன மயமாக்கலை தொடங்கி வைத்தவர் டல்ஹவுசி பிரபு
  • நவீன இந்தியாவை உருவாக்கியவர் என புகழப்படுகிறார்.
  • பொதுப்பணித்துறையை நவீனப்படுத்தியதால் இந்தியாவின் பொறியியல் பணித்துறைக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார்.
  • புதயதாக வெல்லப்பட்ட மற்றும் கைப்பற்றப்பட்ட பகுதிகளை நவீன அரசாக மாற்ற மத்திய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொருட்டு டல்ஹவுசி அறிமுகப்படுத்திய திட்டம் சீரமைக்கப்படாத அமைப்பு திட்டம் ஆகும்.
  • இதன்படி புதிய பகுதியில் ஓரு ஆணையர் நியமிக்கப்பட்டார்.
  • இந்த ஆணையர்களை டல்ஹவுசி தனது நேரடி கட்டுப்பாட்டில் மேற்பார்வையிட்டார்.
  • ·   சிம்லா பிரிட்டிஷ் ராணுவத்தின் நிரந்தர தலைமையிடமாக மாறியது.
  • இந்தியாவில் ரயில் பாதைகள் அறிமுகத்தால் பொருளாதரத்தில் ஒரு புதிய சகாப்தமே தோன்றியது.
  • 1853-ல் டல்ஹவுசி ரயில்வே அறிக்கையை தாமே தயாரித்து வெளியிட்டார்.
  • இந்தியாவின் எதிர்கால ரயில்பாதை கொள்கையை இதுவடிவமைத்தது.
  • உத்திரவாத முறையின் கீழ் அவர் ரயில்பாதை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
  • 1853-ல் பம்பாயிருந்து தாணா வரை செல்லும் முதல் ரயில்பாதை இந்தியாவில் தொடங்கப்பட்டது.
  • 1854-ல் கல்கத்தா முதல் ராணிகஞ்ச் வரை ரயில்பாதை போடப்பட்டது.
  • 1856-ல் சென்னை முதல் அரக்கோணம் வரை ரயில்பாதை தொடங்கப்பட்டன.
  • 1852-ல் ஓ ஷாகன்னசே என்பவர் தந்தி துறை யின் முக்கிய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
  • இந்தியாவின் முக்கிய நகரங்களான கல்கத்தா, பெஷாவர், பம்பாய், சென்னை போன்றவை தந்தி மூலம் இணைக்கப்பட்டன.
  • டல்ஹவுசி காலத்தில் சுமார் 4000 மைல்கள் நீளத்திற்கு தந்தி கம்பிகள் நிறுவப்பட்டன.
  • 1857-ம் ஆண்டு பெரும் கலகத்தின் போது தந்தி முறை ஆங்கிலேயருக்கு பெரும் வரப்பிரசாதமாக உதவியது.
  • அதன் இராணுவ மதிப்பு அப்போதுதான் உணரப்பட்டது.
  • தற்கால அஞ்சல் துறைக்கு அடித்தளம் அமைத்தவர் டல்ஹவுசி பிரபு ஆவார்.
  • 1854-ல் புதிய அஞ்சலக சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • இந்தியா முழுவதும் செல்லக்கூடிய ஒரே மாதியான அரை அணா அஞ்சல் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அஞ்சல் தலைகளும் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டன.
  • 1854-ல் சர் சார்லஸ் உட்கல்வி அறிக்கையை வெளியிட்டார்.
  • உட்கல்வி அறிக்கை இந்தியாவின் அறிவுப்பட்டயம் என கருதப்படுகிறது.
  • தொடக்க கல்வி, இடை நிலைக்கல்வி, உயர்கல்வி என அனைத்து நிலை கல்வி வளர்ச்சிக்கும் வழி வகுத்தது.
  • இதனால் கல்வித் துறைகள் சீரமைக்கப்பட்டன.
  • 1857-ல் கல்கத்தா, பம்பாய், சென்னையில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.
  • டல்ஹவுசி காலத்திற்கு முன் பொது பணித்துறை அலுவல்கள், கிளை ராணுவ வாரியம் கவனித்து வந்தது.
  • டல்ஹவுசி பொதுப்பணிக்கு தனியாக ஒரு பொது பணித்துறையை ஏற்படுத்தினார். கால்வாய்கள் வெட்டுவதற்கும் சாலைகள் அமைப்பதற்கும் கூடுதல் நிதியை ஒதுக்கினார்.
  • 1854-ல் கங்கை கால்வாய் பணி நிறைவடைந்தது. பல பாலங்கள் கட்டப்பட்டன.
  • பொதுப்பணித்துறையை நவீனப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் பொறியியல் பணித்துறைக்கு அடித்தளம் அமைத்தவர் என போற்றப்படுகிறார்.
  • டல்ஹவுசி பல துறைகளிலும் வளர்ச்சிக்கான சகாப்தத்தை அவர் தொடங்கி வைத்தார்.
  • ரயில் பாதை மற்றும் தந்தி துறைகளின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
  • நவீன இந்தியாவை உருவாக்கியவர் என புகழப்படுகிறார்.

No comments:

Post a Comment