டிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 11


 •  ஹரப்பா நாகரிகம் - நகர நாகரிகம்
 • திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு - கி.மு.31
 • இடைச்சங்கம் நடைபெற்ற நகரம் - கபாடபுரம்
 • பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் -கார்கி
 • சுனாமி என்ற சொல் ஜப்பான் மொழியிலிருந்து வந்தது.
 • கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு 1013  மில்லிபார்களாகும்
 • பர்கான் எந்த செயலோடு தொடர்புடையது - படிய வைத்தல் நிலத்தோற்றம்.
 • பான்ஜியா 7 பெரிய தட்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது.
 • துளசிதாசர் எழுதிய நூல் – இராமசரிதமானஸ்
 • விஜய நகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1336
 • இந்தியக் கிளி என அழைக்கப்பட்ட கவிஞர் – அமிர்குஸ்ரு
 • முதலாம் தரைன் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர் – பிருதிவிராசன்
 • காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் - கரிகால சோழன்
 • தர்மபாலர் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தை விக்ரமசீலம் என்ற இடத்தில் நிறுவினார்
 • பூமியின் மத்தியில் கிழக்கு மேற்காக செல்லும் கோடு - பூமத்திய ரேகை
 • தெற்கு வடக்காக செல்லும் கோடு - தீர்க்கக் கோடு
 • பூமியின் மொத்த கோண அளவு - 360º
 • 0º டிகிரி தீர்க்கக் கோடு என்பது - அட்சக்கோடு
 • சூரிய குடும்பத்தின் நாயகன் - சூரியன்
 • சந்திரன் பூமியை சுற்றிவர ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.
 • பல கோடிக்கணக்கான விண் மீன்கள் தொகுதியை அண்டம் என்பர்
 • பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது.
 • மாநகராட்சி தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
 • இந்தியாவில் இக்காலத்தில் செயற்படும் உள்ளாட்சி அமைப்பை முதன் முதலில் நடைமுறைப்படுத்தியவர் - ரிப்பன் பிரபு
 • இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்
 • தொலை நோக்கியில் மட்டுமே புலப்படும் கோள் - யுரேனஸ்
 • பூமியின் அச்சு 231/2º டிகிரி சாய்ந்துள்ளது.
 • நாளந்தா பல்கலைக்கழகம் குமார குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்டது.
 • இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டவர் - கனிஷ்கர்
 • மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா
 • பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும் எனஅறு கூறியவர் - வாக்கர்
 • சாலைப் போக்குவரத்தின் சட்ட திட்டங்கள் அமலுக்கு வந்த ஆண்டு - 1989
 • தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
 • உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8.
 • தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்படும் நாள் - நவம்பர் 19
 • தந்தித் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்ட வருடம் -1844
 • பருத்தி கரிசல் மண்ணில் அதிகமாக விளைகிறது.
 • நெல் ஒரு அயனமண்டல பயிராகும்.
 • மேக்னடைட் தாதுவை கொண்ட கனிமம் - இரும்பு
 • இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின்சக்திநிலையம் அமைந்துள்ள இடம் - பக்ராநங்கல்
 • பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு - 1757
 • கி.பி. 1857-ம் ஆண்டு புரட்சி கானிங் என்பவர் காலத்தில் தோன்றியது.
 • இரும்பு பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர் - டல்ஹெசி
 • நிலையான நிலவரித் திடிடத்தை அறிமுகப்படுத்தியவர் - காரன்வாலிஸ்
 • ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1773

Post a Comment

0 Comments