Friday, February 3, 2017

வரிகளின் வகைகள் அறிந்துகொள்வோம் !

சாதாரணமாக அனைவரும் அறிந்து வைத்திருப்பது வீட்டு வரி, தண்ணீர் வரி, விற்பனை வரி என்பதுதான். மேலும் சில முக்கிய வரி வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றி அறிந்துகொள்வோம்.

நேர்முக வரிகள்: 
ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் அல்லது வருமானத்தின் மீது போடப்படுவது. எ.கா. வருமானவரி, சொத்துவரி, நிலவரி.

மறைமுக வரிகள்: 
பண்டங்களின் மீது விதிக்கப்படுவது. எ.கா. இறக்குமதிவரி, கேளிக்கைவரி, விற்பனைவரி, சுங்கவரி, கலால்வரி.

மையஅரசு வரிகள்: 
வருமானவரி, சிறப்பு தீர்வைகள், செல்வவரி, ஏற்றுமதி இறக்குமதி வரி, ஆயத்தீர்வைகள்.
(மத்திய அரசுக்கு அதிக வருவாய் அளிப்பது கலால்வரி.)

மாநில அரசு வரிகள்:
நிலவரி (வேளாண்மை)பதிவுக்கட்டணங்கள், தொழில், வணிகம், வேலை மீதான வரிகள், விற்பனை வரி, கேளிக்கை வரி, மோட்டார் வாகன வரி, வேளாண்மை வரி.
(மாநில அரசுக்கு அதிக வருவாய் தருவது விற்பனை வரி)

ஆக்ட்ராய் வரி: 
நகருக்குள் வரும் பொருட்கள் மீது நகராட்சி விதிப்பது.

VAT (Value Added Tax) : மதிப்பு கூட்டப்பட்ட வரி.
ஒரு பொருளின் உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் விதிக்கப்படும் வரி.

MODVAT:  
ஏற்றுமதியாளர்களுக்கு உலக சந்தையில் போட்டியிட உதவுவது.

No comments:

Post a Comment