Friday, February 3, 2017

இந்திய ரிசர்வ் வங்கி பற்றிய தகவல்கள் !

இந்திய ரிசர்வ் வங்கி பணத்தை அச்சடித்து வெளியிடும் உரிமையை கொண்ட வங்கி மட்டுமல்ல.. அதனுடைய பணிகள் என்னென்ன, ரிசர்வ் வங்கி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்பது போன்ற சுவராஷ்யமான தகவல்களை இந்த கட்டுரையின் வாயிலாக அறிந்துகொள்வோம்.

இந்திய ரிசர்வ் வங்கி கி.பி.1935ல், பாரத ரிசர்வ் வங்கிச்சட்டம் கி.பி.1934ன் கீழ் நிறுவப்பட்டது.

கி.பி. 1949ல் அரசுடைமயாக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி உள்ள இடம் மும்பை
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த தமிழர் ரங்கராஜன்

ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த பிரதமர் மன்மோகன்சிங்

ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் டி.சுப்பாராவ்

ஒரு ரூபாய் நோட்டை தவிர மற்ற அனைத்து ரூபாய் தாள்களையும் வெளியிடுகிறது.

ஒரு ரூபாய் நோட்டில் கையொப்பம் இடுபவர் நிதித்துறை செயலாளர்

இந்திய ரிசர்வ் வங்கி அந்நிய செலாவாணியை கட்டுப்படுத்துகிறது.

வெளிநாட்டு கடன்களை நிர்வகிக்கிறது.

வங்கித்துறையின் வரவு மற்றும் கட்டுப்பாட்டை நிர்வகிக்கிறது.

பணச்சந்தையின் பாதுகாவலராகப் பணியாற்றுகிறது.

ரிசர்வ் வங்கியில் கடன் வாங்க இயலாது

ரிசர்வ் வங்கி இந்தியாவில் மக்களிடம் காணப்படும் வருமான ஏற்றத்தாழ்வை மதிப்பிடுகிறது.

பணத்தின் மதிப்பை ரிசர்வ் வங்கி நிலைப்படுத்துவதற்காக பணக் கொள்கையை பின்பற்றுகிறது.

Tags: Indian Reserve Bank, About Indin Reserve Bank, India Rupee Note, About indian reserve bank, Reserve Bank of India.

No comments:

Post a Comment