தமிழ் இலக்கண சொற்களுக்குரிய சரியான ஆங்கில சொற்கள்

ஒரு மொழிக்கு இலக்கணம் முக்கியம். இலக்கணம் இல்லாத மொழி முழுமையாகாது. இலக்கணத்தை முறையாக கொண்ட மொழிகள் மிக குறைவுதான். அதில் நாமெல்லாம் தமிழ் படித்து, பேசி இன்புறும் தமிழ் மொழிதான் முதன்மையானது.

சரி.. வளா.. கொழா இழுவை எதுக்கு? நேரடியாகவே பதிவுக்கு வந்திடலாம்.. நாமெல்லாம் இலக்கணம் படித்திருக்கிறோம். சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம் இப்படி... 

இந்த இலக்கணத்தில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு சரியான ஆங்கில பதம் - சொல் என்னவென இதில் தெரிந்துகொள்வோம். 

தமிழ் இலக்கண சொற்களுக்குரிய சரியான ஆங்கில சொற்கள்


 • எழுத்து - Letter
 • முதல் எழுத்து – Primary letter
 • சார்பு எழுத்து – Secondary letter
 • உயிர் – Vowels
 • மெய் – Consonantsஆய்தம் – Guttural
 • குறில் – Short Letters
 • நெடில் – Long letters
 • அளபெடை – Prolongation of letters, Protraction
 • சுட்டெழுத்து – Demonstrative letters
 • அண்மைச் சுட்டு – Proximate demonstratives
 • சேய்மைச் சுட்டு – Remote demonstratives
 • வினாவெழுத்து – Interrogative letters
 • இன எழுத்து – Kindred letters
 • வல்லினம் – Hard Consonants
 • மெல்லினம் – Soft Consonants
 • இடையினம் – Medial Consonants
 • உயிர்மெய் – Vowel-Consonants
 • குற்றியலுகரம்- Shortened
 • குற்றியலிகரம் – Shortened
 • பெயர்ச்சொல் – Noun
 • வினைச்சொல் – Verb
 • இடைச்சொல் – Interjection, Conjunction, Particles and Adjuncts
 • உரிச்சொல் – Adjective and Adverb
 • பொருட் பெயர் – Names of things
 • இடப்பெயர் – Names of places
 • காலப் பெயர் – Names of times
 • சினைப் பெயர் – Names of parts or the organs of the body
 • குணப் பெயர் – Names of quality
 • பண்புப் பெயர் – Abstract Nouns
 • தொழிற் பெயர் – Verbal Nouns
 • வினாப் பெயர் – Interrogative Nouns
 • இடுகுறிப் பெயர் – Conventional Nouns – Arbitraries
 • காரணப் பெயர் – Casual Noun
 • காரண இடுகுறிப் பெயர் – Casual noun used as a Coventional Noun
 • பொதுப்பெயர் – Epincene, Common or generic Names
 • ஆகுபெயர் – Metaphor, Metonymy, Synecdoche
 • ஆக்கப் பெயர் – Optional
 • வினையாலனையும் பெயர் – Conjugated Nouns, Inflectional Nouns
 • எழுவாய் – Subject
 • பயனிலை – Predicate
 • செயப்படு பொருள் – Objective force
 • உயர்தினை – Personal class
 • ஆஃறினை – Impersonal class
 • ஆண்பால் – Masculine Gender
 • பெண்பால் – Feminine Gender
 • பலர்பால் – Masculine plural and Feminine plural
 • ஒன்றன்பால் – Neuter Singular
 • பலவின்பால் – Neuter plural
 • ஒருமை – Singular
 • பன்மை – Plural
 • தன்மை – First person
 • முன்னிலை – Second person
 • படர்க்கை – Third Person
 • முதல் வேற்றுமை – Nominative case
 • இரண்டாம் வேற்றுமை – Acuusative case
 • மூன்றாம் வேற்றுமை – Instrumental case
 • நான்காம் வேற்றுமை – Dative case
 • ஐந்தாம் வேற்றுமை – Ablative case
 • ஆறாம் வேற்றுமை – Genitive case
 • ஏழாம் வேற்றுமை – Locative case
 • எட்டாம் வேற்றுமை – Vocative case
 • அண்மை விளி – Proximate vocative case
 • சேய்மைவிளி – Remote Vocative Case
 • வேற்றுமைப் புணர்ச்சி – Casal combination
 • அல்வழிப் புணர்ச்சி – Combination with all other parts of speeches, but nouns in one of the Cases from 2 to 7
 • இயல்பு – Natural
 • விகாரம் – Change
 • தோன்றல் – Reduplication, Augmentation
 • திரிதல் – Changing, Permutation
 • கெடுதல் – Dropping, Omission
 • பகுபதம் – Derivative  
என்ன நண்பர்களே... இனி, எந்த ஒரு தமிழ் இலக்கணச் சொல்லுக்கும் சரியான ஆங்கில வார்த்தை எதுன்னு கேட்டா சரியா எழுதிடுவீங்கதானே....கண்டிப்பா எழுதிடுவீங்கன்னு நம்பறேன்....


Post a Comment

0 Comments