Thursday, December 18, 2014

'TNPSC - VAO' தேர்வில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள் !

TNPSC - VAO தேர்வில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள் !



'TNPSC - VAO' தேர்வில் வெற்றி பெற கீழுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்


1. நீங்கள் சமச்சீர் கல்வி புத்தகங்களை (6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும்)  முழுமையாக படிக்க வேண்டும். 

2. அவற்றை படித்து முடித்த பிறகு , உங்களிடம் TNPSC Guide களை படிக்க வேண்டும். அப்பொழுதான் கைடில் இருக்கும் கேள்வி  பதில்கள் உங்களுக்கு உடனடியாக மனதில் நிற்கும். 


3. சுய தேர்வு எழுதி பழக வேண்டும். முந்தைய "TNPSC Group IV" குரூப் கேள்வி தாள்களை எடுத்துக்கொண்டு, தேர்வில் கொடுக்கப்படும் OMR சீட் போன்று உள்ள சீட்டில் நீங்களாகவே 3 மணி நேரத்திற்கு அந்த கேள்வித்தாள்களில் உள்ள கேள்விகளுக்கு Shade செய்து பழக வேண்டும். 

4. இவ்வாறு செய்யும்பொழுது தேர்வு நேரங்களில் Shading பிரச்னை மற்றும் பதட்டம் ஆகியவற்றை குறைக்க முடியும். அதே சமயம் ஒரு தேர்வை முழுமையாக எழுதிய பிறகு, அந்த கேள்வித்தாள்களுக்கான விடைகளை சரிபார்க்கும்பொழுது, உங்களுக்கு அந்த கேள்விகளுக்கான சரியான விடைகள் அனைத்தும் தெரிந்துவிடும். 


5. முடிந்தால் "TNPSC Coaching ClassK செல்லலாம். அவ்வாறு செல்லும்பொழுது, பணம் கொடுத்து படிப்பதால் அங்கு அவர்கள் கொடுக்கும் அறிவுரைகள் குறிப்புகள் மற்றும் தேர்வுகள் அனைத்துமே பயனுள்ளதாக அமையும். 

6. தொடர்ந்து படித்தல்: ஒரு முறை படித்துவிட்டோம். நமக்கெல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கு இருக்க கூடாது. தெரிந்த வினாக்களாக இருந்தாலும்,தெரியாத வினாக்களாக இருந்தாலும், அவைகளை தொடர்ந்து படித்துக்கொண்டிருக்க வேண்டும். 

7.நேரம் கிடைக்கும்போதெல்லாம் திருப்புதல் நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். கணிதம் போன்ற பாடங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கான சூத்திரங்கள், மற்றும் கணிதங்களை போட்டு, சரியான விடைகளை ஒரீரு வினாடிகளில் கண்டுபிடிக்கும் அளவிற்கு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். 


8. செய்தி தாள் வாசிப்பது, அன்றாட நடப்பு நிகழ்வுகளை தெரிந்துகொள்வது பெரிதும் கைகொடுக்கும். பொது அறிவுப் பிரிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க இதுபோன்ற கற்றல் செய்கைகள் பயனுள்ளதாக இருக்கும். 


மேற்கண்ட குறிப்புகளை பின்பற்றினால் நிச்சயம் நீங்கள் TNPSC V.A.O. தேர்வில் கட்டாயம் வெற்றி பெறலாம். 

No comments:

Post a Comment