சமச்சீர் கல்வி 'TNPSC BOOKS' டவுன்லோட் செய்ய

டி.என்.பி.எஸ்.சி புத்தகங்களை டவுன்லோட் செய்து அவற்றில் உள்ளதை படித்து தேர்வில் வெற்றி பெறலாம். குறிப்பாக சமச்சீர் கல்வி புத்தகங்களை படித்தால் நிச்சயம் வெற்றிபெறலாம்.

சமச்சீர் கல்வி புத்தகங்களை எங்கே டவுன்லோட் செய்வது? அதற்கான சுட்டி கீழே கொடுக்கட்டுள்ளது. அதற்கு முன்பு TNPSC IV Group தேர்வில் எளிதாக வெற்றிப் பெறுவது குறித்த சில முக்கியமான குறிப்புகளை பார்ப்போம்.
samasheer kalvi tnpsc book

சமச்சீர் கல்வி புத்தகங்களில் உள்ள பாடங்களில் முக்கியமான வார்த்தைகள் தடிமனாகவோ அல்லது வண்ணமிட்டோ இருக்கும். சமச்சீர் கல்வி புத்தகங்களில் உள்ள சிறப்பம்சமே அதுதான்.

ஒரு புத்தகம் வண்ணமயமாக இருக்கும்போது அது ஒரு படம்போல் உங்கள் மனதில் பதிகிறது. ஆழ்ந்து படிக்கும்போது அதில் குறிப்பிட்டுள்ள முக்கியமான வார்த்தைகளும் மனக்கண் முன்னே தோன்றிடும்.

அது மட்டுமல்லாமல் தற்போது உள்ள புதிய கல்வி திட்டத்திற்கேற்ப அந்த புத்தகங்கள் வடிமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படிதான் "TNPSC BOOKS" களும் வடிவமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் அடிப்படை இல்லாமல் பழைய கல்வி முறையில் படித்தவர்கள் பெரும்பாலும் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதில்லை.

எனவேதான் சமச்சீர் கல்வி புத்தகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதிலிருந்துதான் 'TNPSC EXAM' க்கு கேள்விகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

அதனால் சமச்சீர் கல்வி புத்தகங்களை படித்தால் கண்டிப்பாக தமிழ்நாடு போட்டித் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் கட்டாயம் வெற்றி பெற்று நீங்கள் VAO ஆக முடியும் என்பதில் சந்தேகமில்லை.

சமச்சீர் கல்வி 'TNPSC BOOKS' டவுன்லோட் செய்ய சுட்டி: Download Samacheer TNPSC  BOOKS.

Post a Comment

0 Comments