டி.என்.பி.எஸ்.சி தமிழ் - திருக்குறள் ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வி கேள்வி-பதில்கள்

டி.என்.பி.எஸ்.சி சமச்சீர் கல்வி திருக்குறள் கேள்வி பதில்கள்

திருக்குறளை இயற்றிவர் திருவள்ளுவர் என்பது நமக்குத் தெரியும். திருவள்ளுவரைப் பற்றிய மேலதிக விபரங்களைத் தெரிந்துகொள்ள இப்பகுதி நமக்கு உதவும். 

திருவள்ளுவர் வாழ்ந்த காலம் எது? 

கி.மு 31

திருவள்ளுவரின் வேறு பெயர்கள் என்னென்ன?

செந்நாப்போதார், நாயனார், தெய்வப் புலவர், முதற்பாவலர், மாதானு பங்கி, தெய்வ புலவர், பொய்யில் புலவர், பெருநாவலர்

திருக்குறளின் வகைகள் எத்தனை? அவை எனென்ன?
  1. அறத்துப்பால் 
  2. பொருட்பால்
  3. இன்பத்துப்பால்
அறத்துப்பால் 38 அதிகாரங்கள்
பொருட்பால் 70 அதிகாரங்கள்
காமத்துப்பால் 25 அதிகாரங்கள்

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கை?

1330

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எண்ணிக்கை?

133

திருக்குறள் எந்த நூல் வகையைச் சேர்ந்தது? 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்

திருக்குறளின் வேறு பெயர் என்னென்ன? 

முப்பால், உலக பொதுமறை, தமிழ்மறை

உலக மக்கள் திருக்குறளை "உலகப் பொதுமறை' என அழைக்கின்றனர். 

திருவள்ளுவர் ஆண்டு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

கிறிஸ்துவ ஆண்டுடன் 31 ஆண்டுகளை கூட்டினால் வரும் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு ஆகும். உதாரணமாக 2013 ம் ஆண்டுடன் 31 ஐ கூட்ட வருவது திருவள்ளுவர் ஆண்டு. அதாவது கிறிஸ்துவ ஆண்டு 2013 எனில் திருவள்ளுவர் ஆண்டு 2044 ஆகும். 

கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்னரே திருவள்ளுவரின் காலம் தொடங்கிவிட்டது என்பது இதற்கு பொருளாகும். 

Post a Comment

0 Comments