பூமியும் சூரியக்குடும்பமும் - சிறப்பு தகவல்கள் - வி.ஏ.ஓ பொது அறிவுவணக்கம் நண்பர்களே..!

சிறிய வயதில் சூரிய குடும்பத்தில் கோள்கள் ஒன்பது என படித்திருப்போம். ஆனால் தற்பொழுது கோள்கள் எட்டு மட்டுமே என வானவியல் விஞ்ஞானம்  கூறுகிறது.

சூரியக் குடும்பம் என்பது சூரியன், எட்டுக்கோள்கள், கோள்களைச் சுற்றிவரும் சந்திரன் போன்ற துணைக்கோள்கள், குள்ளக் கோள்கள், இலட்சக் கணக்கான குறுங்கோள்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியன அடங்கியதாகும்.


சூரியக் குடும்பத்தின் நாயகன் சூரியன் என்பது நமக்குத் தெரியும். சூரியன் சூரியக் குடும்பத்தின் மையத்தில் உள்ளது. சூரியனுடைய ஈர்ப்புச் சக்தியே மற்ற கோள்களை இதனுடன் பிணைத்து வைத்துள்ளது. தன்னைத் தானே ஒளிரச் செய்யும் ஒரே வான்பொருள் சூரியன் மட்டுமே.

சூரியனுக்கு மொத்தம் எட்டுக்கோள்கள், கோள்கள் தம் அச்சில் சுழல்வதோடு, சூரியனையும் சுற்றி வருகின்றன.

புதன், செவ்வாய், வெள்ளி, பூமி ஆகியன திடக்கோள்கள்.வியாழன், சனி, நெப்ட்யூன், யுரேனஸ் ஆகியன வாயுக்கோள்கள்.

எல்லாக் கோள்களும், கடிகாரத்தின் எதிர்திசையில் சுற்றிவருவதாக்க் காணப்படும். சூரியனைச் சுற்றும் கோள்கள் தம் பாதையை விட்டு விலகுவதில்லை.

கோள்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.

புளோட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே என்பவை குள்ளக்கோள்கள்.

சந்திரன், பூமியின் துணைக்கோள். சூரிய ஒளியை சந்திரன் பிரதிபலிக்கிறது. இரவு வானில் வெளிப்படும் ஒளிக்கீற்று எரி நட்சத்திரம் எனப்படுகிறது.வால் நட்சத்திரம் என்பது பனி, தூசு முதலிய பொருள்கள் நிறைந்த பனிப்பாறையே வால்நட்சத்திரம்.

பல கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுது அண்டம். பல கோடிக்கணக்கான அண்டங்களைக் கொண்டது பேரண்டம்.

பேரண்டத்தில் காணப்படும் பல்வேறு அண்டங்களில் ஒன்று பால்வெளி அண்டம். பால்வெளி அண்டத்திலுள்ள சூரியக் குடும்பத்தின் ஒரு பகுதியானப் பூமியில் நாம் வாழ்கிறோம்.
Post a Comment

1 Comments