Saturday, September 16, 2023

பெரியார் பற்றிய தகவல்கள்!

 பெரியார் பற்றிய தகவல்கள்!

periyar notes


  • ஈரோட்டில் 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்தார். பெற்றோர் வெங்கட்ட நாயக்கர் – சின்னத் தாயம்மாள். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராமசாமி. இவருக்கு பெரியார் என பெயர் வைத்தவர் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார்.
  • பள்ளிப்படிப்பு பத்து வயதில் நிறுத்தப்பட்டது. 19 வயதில் மாமன் மகள் நாகம்மையை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
  • அயோத்தி தாசர், புலவர் மருதையா பிள்ளை, துறவி கைவல்யம் அடிகளார் ஆகியோரின் பகுத்தறிவுக் கொள்கையால் பெரியார் ஈர்க்கப்பட்டார். மூடநம்பிக்கையை எதிர்த்து தன் தங்கையின் மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார்.
  • 1918ம் ஆண்டு ஈரோடு நகராட்சித் தலைவராக பெரியார் நியமிக்கப்பட்டார். ஆங்கிலேய அரசு கவுரவ மாஜிஸ்திரேட்டராக நியமித்தது. இதுபோல அரசு மற்றும் தனியார் துறை பதவிகள் என்று மொத்தம் 29 பதவிகளை ஒரே சமயத்தில் வகித்தார்.
  • மது விலக்குப் போராட்டத்திற்காக தன் தோட்டத்தில் கள் இறக்கப்பட்டு வந்த 500 தென்னை மரங்களையும் வெட்டினார். காந்தியடிகளால் கவரப்பட்டார். கதர் ஆடை அணிந்துகொள்ள மக்களை வேண்டி க்கொண்டார். கதர் துணியை தன் தோளில் தூக்கி க்கொண்டு ஊர் ஊராக சென்று கதரை விற்றார்.
  • குடல் இறக்க நோயால் பாதிக்கப்பட்டு 1973ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இறந்தார். அப்போது அவருக்கு வயது 95.
  • கள்ளுக்கடை மறியலில் மனைவி நாகம்மையையும் சகோதரி கண்ணம்மாவையும் கலந்து கொள்ள செய்தார். இது மற்ற பெண்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியது. குடியரசு என்ற பத்திரிக்கையை சொந்தமாக நடத்தி வந்தார்.
  • 1938ம் ஆண்டு நவம்பர் 3ம் நாள் சென்னையில் மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை தலைமையில் கூடிய பெண்கள் மாநாடு பெண்களும் மொழிப் போரில் கலந்துகொண்டு சிறை செல்ல முடிவெடுத்தது. இம் மாநாட்டில் ஈ. வெ. ரா ஆற்றிய உரை பெண்களை வீறு கொண்டு எழச் செய்தது. அந்த வீறுகொண்ட உரை நிகழ்த்தியதற்காக ஈ.வே.ரா கைது செய்யப்பட்டார். அம்மாநாட்டில் தான் ஈவேராவின் பெயர் முன் “பெரியார்” என்று சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கை டாக்டர் அம்பேத்கரை மிகவும் கவர்ந்தது. அவர் பெரியாரை மும்பைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று 1940 ல் ஜனவரியில் மும்பை சென்றார் பெரியார். அவர் சேவையை பாராட்டி ” இந்தியாவில் உள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பெரியாரின் சேவை ” தேவை என்று அம்பேத்கர் பெருமிதத்துடன் கூறினார்.
  • எம். ஏ படித்துவிட்டு பெரியாரின் “குடியரசு” பத்திரிக்கையில் வேலை செய்த அண்ணாவுக்கு பெரியார் மாதம் 80 ரூபாய் தான் சம்பளமாக கொடுத்தார்.
  • பெரியார் தனது 25 வது வயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு புறப்பட்டு விட்டார். சாமியாராகி விடுவது என்ற முடிவோடு ரயில் ஏறி காசிக்குச் சென்றார்.
  • பெரியார் ” எனது அரசியல் குரு ராஜாஜி தான் ” என்று குறிப்பிட்டார். அதனால் தானோ என்னவோ பெரியார் ராஜாஜியைப் பற்றி குறிப்பிடும் போதெல்லாம் ” ஆச்சாரியார் ” என்று மரியாதையுடன் தான் சொல்வார்.
  • பெரியார் அவர்களின் சீரிய பொன்மொழிகளை தொகுத்து ” பெரியார் புரட்சி மொழிகள் ” என்று நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.
  • தந்தை பெரியார் பெயரில் ஆசியாவிலேயே மிகப் பெரிய மாநாட்டு அரங்கம் தமிழகத் தலைநகரில் நிறுவப்பட உள்ளது.?
  • வைக்கத்தில் தந்தை பெரியார் தீண்டாமை ஒழிப்புப் போர் நடத்திய இடத்தில் பெரியாரின் சிலை, நூலகம், குழந்தைகள் பூங்கா ஆகியவை கொண்ட பெரியாரின் நினைவு வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது.
  • தம் வாழ்நாளில் 8600 நாள் 13,12,000 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து 10,700 கூட்டங்களில் 21,400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றிச் சமுதாய தொண்டு ஆற்றினார்.
  • 1970ம் ஆண்டு சமுதாய சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ விருது பெரியாருக்கு வழங்கப்பட்டது.
  • நடுவண் அரசு 1978ம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
  • சில இடங்களில் கைத்தடியை பிடித்தவாறும் வேறுசில இடங்களில் உட்கார்ந்து புத்தகம் படித்தவாறும் அவரது சிலை அமைக்கப்பட்டு இருக்கும்.
  • சாதி உயர்தாழ்வுகளையும் மத வேறுபாட்டையும் அகற்ற வேண்டும் என்று பகுத்தறிவாளர் சங்கம் தொடங்கினார். மற்போர், குத்துச்சண்டை முதலிய விளையாட்டுகளையும் பெண்கள் கற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்றார். அரசுப்பணி, இராணுவம், காவல்துறை முதலியவற்றிலும் பெண்களைச் சேர்த்தல் வேண்டும் என்றார். பொறுமை, அமைதி, பேணுந்திறன் முதலியன பெண்களுக்கு மட்டுமே உரியவை எனவும் சினம், வீரம், ஆளுந்திறன் முதலியன ஆண்களுக்கு மட்டுமே உரியவை எனவும் கூறுவதனை ஏற்க இயலாது. இப்படி கூறுவது பெண்களை ஆட்டுக்கும் ஆண்களை புலிக்கும் ஒப்பாகக் கூறுவதுபோல் அல்லவா உள்ளது. பெண்களுக்கும் துணிவு, வீரம், ஆளுந்திறன் முதலியன உண்டு என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். அதுவே பெண் விடுதலை என வீர முழக்கமிட்டார்.

No comments:

Post a Comment