Friday, July 28, 2023

சித்தர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் IN SCHOOL BOOKS

சித்தர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் IN SCHOOL BOOKS

1.சித்தர் என்ற சொல் சித் என்ற வடமொழி சொல்லில் இருந்து தோன்றியது.

2.சித் - அறிவு.

3. சித்தர்கள் - நிறைவடைந்தவர்.

4. 18 சித்தர்கள் என்று சொல்வது மரபு, வரையறுத்து கூறினார் இல்லை.

5. 18 என்பது அவர்கள் பெற்ற பேறுகளை குறிக்கிறது.

6. சித்துக்களை செய்பவர்கள் சித்தர்கள்.

7. சித்து - மனம், கருத்து, ஆன்மா.

8. சித்து 8 வகைப்படும். எனவே அட்டமாசித்து என அழைக்கப்படுகிறது.

9. சித்தர்களின் நோக்கம் யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

10. கடவுளை காண முயல்பவர்கள் பக்தர்கள். கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என தேவாரம் கூறுகிறது.

8 வகையான சித்துக்கள் :

1. அணிமா - உடலை சிறிதாக்குதல்

2. மகிமா - உடலை பெரிதாக்குதல்

3. கரிமா - மலை போன்று வளமையாக்குதல்

4. இலகிமா - பஞ்சு போன்று லேசாக்குதல்

5. பிராப்தி - நினைத்தவுடன் அடைதல்

6. பிராகாமியம் - பிறர் உடலில் புகுந்து வெளியேறுதல்

7. ஈசத்துவம் - படைத்தல், காத்தல், அழித்தல்

8. வசித்துவம் - வசியம் செய்தல்



No comments:

Post a Comment