மாத்திரை என்றால் என்ன? மாத்திரையின் அளவுகள் யாது?
ஓர் எழுத்தை ஒலிப்பதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் கால அளவு மாத்திரை எனப்படும்.
கால், அரை, ஒன்று, இரண்டு என்று மாத்திரையின் அளவுகள் எண்ணப்படும்.
கண் இமைப்பதற்கு ஆகும் நேரம் ஒரு மாத்திரை,
கைச்சொடுக்கும்போது எழும் ஒலியளவும் ஒரு மாத்திரைதான்.
“கண் இமை நொடி என் அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உயர்ந்தோர் கண்டலாறே” என்கிறது தொல்காப்பியம்
“இயல்பு எழும் மாந்தர் இமைநொடி மாத்திரை” என்பது நன்னூலாரின் நூறாம் நூற்பா ஆகும்.
கண் இமைப்பதை இயல்பாகச் செய்வோம். விரைந்தும் இமைக்க முடியாது. மெதுவாகவும் இமைக்க முடியாது.
கைச்சொடுக்குவதை வேகமாகவும் செய்ய முடியாது. மெதுவாகவும் செய்ய முடியாது.
அந்தச் செயலில் மனிதர்களின் இயல்பு என்னவோ அப்படித்தான் செய்ய முடியும்.
கண்களை மெதுவாக இமைக்கிறேன் என்று உங்களால் செய்து காட்ட முடியுமா? முடியாது. மெதுவாகச் சொடுக்கு போட முடியுமா? முடியாது. அச்செயல்களை இயல்பாகத்தான் செய்ய முடியும்.
நாமே வலிந்து இயல்புக்கு மாறாகச் செய்ய முடியாது. அதனால்தான் “இயல்பு எழும் மாந்தர் இமை நொடி” என்று நன்னூல் ஆசிரியர் பவணந்தி பொருத்தமாகக் கூறுகிறார்..
உயிர்க்குறில் உயிர்மெய்க்குறில் ஆகிய குறில் எழுத்துகளுக்கு ஒரு மாத்திரை.
உயிர் குறில் ஐந்து. அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் உயிர்க்குறில் எழுத்துகள்.
இவற்றிற்கு ஒரு மாத்திரை
உயிர் குறில் ஐந்து எழுத்துகளோடும்
மெய் எழுத்து பதினெட்டும்
சேர்ந்து தொண்ணூறு உயிர்மெய்க்
குறில் எழுத்துகள் தோன்றும்.
இவற்றுக்கும்
கால அளவு ஒரு மாத்திரை.
கண் இமைக்கும் அளவு ஒரு மாத்திரை. குறில் எழுத்துகளை ஒரு மாத்திரை அளவில் ஒலிக்க வேண்டும்.
உயிர் நெடில் உயிர்மெய் நெடில் எழுத்துகளுக்கு இரண்டு மாத்திரை.
உயிர் நெடில் எழுத்துகள் ஏழு.
ஆஈஐஏஐஓ ஒள இந்த ஏழு உயிர்
நெடில் எழுத்துகளும் பதினெட்டு
மெய் எழுத்துகளோடு சேர்ந்து
பிறக்கும் உயிர் மெய் நெடில் எழுத்துகள்
நூற்று ஐம்பத்து ஆறு ஆகும்.
இவற்றிற்கான கால அளவு
இரண்டு மாத்திரை.
நெடில் எழுத்துகளை இரண்டு மாத்திரை அளவில் ஒலிக்க வேண்டும்.
மெய் எழுத்துகள் பதினெட்டு.
க்ங்
ச்ஞ்
ட் ண்
த் ந்
ப்ம்
ய் ர்
ல்வ்
ழ்ள்
ற்ன்
ஆகிய பதினெட்டு மெய் எழுத்துகளுக்கும் அரை மாத்திரை அளவில் ஒலிக்க வேண்டும்.
ஒரு மாத்திரைக்குக் கண்ணிமைக்கும் அளவைப்போல, அரை மாத்திரைக்கு ஏதேனும் அளவு உள்ளதா? “உள்ளல் காலே ஊன்றல் அரையே” என்பது அதற்கான செய்யுள் வரி.
நினைப்பதற்கு உரிய காலம் கால் மாத்திரை.
நினைத்தது மனத்தில் அமர்வதற்குரிய காலம் அரை மாத்திரை.
ஒரு நினைவு நம் மனத்தில் படும் நேரம்தான் அரை மாத்திரை.
மெய்யெழுத்துகளைப் போலவே ஃ என்னும் ஆய்த எழுத்துக்கும் ஒலிப்பளவு அரை மாத்திரைதான்.
மாத்திரையின் அளவு
1. மாத்திரை என்பது – கால அளவைக் குறிக்கிறது.
2. உயிரெழுத்து (குறில்) – ஒரு மாத்திரை.
3. உயிரெழுத்து (நெடில்) – இரு மாத்திரை.
4. உயிர்மெய் (குறில்) – ஒரு மாத்திரை.
5.உயிர்மெய் (நெடில்) – இரு மாத்திரை.
6. மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் மாத்திரை அளவு – அரை மாத்திரை.
7. குற்றியலிகரம், குற்றியலுகரம் மாத்திரை அளவு – அரை மாத்திரை.
8.அளபெடை எழுத்துகளின் மாத்திரை – இரண்டிற்கு மேல்.
9. ‘ ஐ’ மாத்திரை அளவு – 2.
10. ஐகாரக்குறுக்கம் மாத்திரை அளவு – ஒரு மாத்திரை, ஒன்றரை மாத்திரை.
11. ‘ஔ’ மாத்திரை அளவு – 2
12. ஒளகாரக்குறுக்கம் மாத்திரை அளவு – ஒன்றரை மாத்திரை.
13. ‘ம்’ மாத்திரை அளவு – அரை மாத்திரை.
14. மகரக்குறுக்கம் மாத்திரை அளவு – கால் மாத்திரை .
15. ஆய்த எழுத்து ஃ மாத்திரை அளவு – அரை மாத்திரை.
16. ஆய்தக்குறுக்கம் மாத்திரை அளவு – கால் மாத்திரை.
17. உயிரளபெடை மாத்திரை – இரண்டிற்கு மேல் வரும்.
18.ஒற்றளபெடை மாத்திரை – இரண்டிற்கு மேல் வரும்.
No comments:
Post a Comment