Friday, July 14, 2023

பெருந்தலைவர் காமராஜர் பற்றிய செய்தி குறிப்புகள்

 

பெருந்தலைவர் காமராஜர் பற்றிய செய்தி குறிப்புகள்

 

பெயர்: பெருந்தலைவர (காமராஜர்)
காலம்: 1903-1975
பிறப்பு:விருதுநகர்
பெற்றோர்: குமாரசாமி – சிவகாமி

  • பெருந்தலைவர் காமராசர் விருதுநகரில் பிறந்தார். இவர் சத்த்தியமூர்த்தியை தன் அரசியல் குருவாக ஏற்றக் கொண்டார்.
  • 1954-ல் இராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியது காமராசர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் இவரால் தொடங்கப்பட்டது.
      • தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளக்கு அறுபது விழக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தார். நிலச்சீர்த்திருத்தம் இவரால் கொண்டு வரப்பட்டது. நில உச்சவரம்பு முப்பது ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது.
      • தமிழக அரசு காமராசர் பிறந்த நாளான சூலை 15-ம் நாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது. இவரைக் கல்விக் கண்திறந்தவர் என தமிழுலகம் போற்றுகிறது.
      • கல்விக் கண் திறந்தவர் என்று காமராஜரை பாராட்டியவர் தந்தை பெரியார்.
      • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
        • நடுவண் அரசு 1976 பாரத ரத்னா விருது வழங்கியது.
        • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம், விருநகர் இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
        • சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
        • சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டது.
          கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது
        • 1975-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாள் இல்வுலக வாழ்வை நீத்தார்.
      சிறப்பு பெயர்கள்
      • படிக்காத மேதைபெருந்தலைவர்
        தலைவர்களை உருவாக்குபவர்ஏழைப் பங்காளர்
        கர்மவீரர்கருப்புக் காந்தி

        No comments:

        Post a Comment