பொதுத்தமிழ் - இலக்கியம் சீவக சிந்தாமணி
நூற்குறிப்பு
- இந்நூல் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும்.
- இதன் ஆசிரியர் சமண சமயத்தவராகிய திருத்தக்க தேவர். இவர் நரிவிருத்தம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.
- விருத்தப்பாவில் எழுந்த முதல் நூல்
இதன் வேறுபெயர்கள்
| எலி விருத்தம் | மண நூல் |
| காம நூல் | முக்தி நூல் |
| மறை நூல் | இயற்கை தவம் |
| முதல் விருத்தப்பா காப்பியம் | சிந்தாமணி |
| தமிழ் இலக்கிய நந்தாமணி | முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள் |
- இந்நூல் 13 இலம்பகங்களையும், 3145 செய்யுள்களையும் உடையது.
- பெருங்காப்பியத்திற்குரிய உறுப்புகளாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருட்களும் இதில் அடங்கும்.
- கடவுள் வாழ்த்து, சித்த சரணம், அருக சரணம், சாது சரணம், தன்ம சரணம் என்னும் நான்கு பகுதிகளை உடையது.
- காப்பியத் தலைவரன் சீவகன்
- சீவகன் தந்தை – ஏமாங்கத நாட்டுத் தலைவன் கச்சந்தன்
- சீவகன் தாய் – விசயை
- கெடுமதி உடைய அமைச்சன் – கட்டியங்காரன்
சீவகனின் மனைவிகள் (8 பேர்)
| காந்தருவதத்தை | பதுமை |
| குணமாலை | கேமசரி |
| கனகமாலை | மினவிமலை |
| சுரமஞ்சரி | இலக்கணை |
- நண்பன் – புதுமுகன்
- வளர்ப்புத் தந்தை – கநத்துக்கடன்
- சீவகனின் ஆசிரியர் – அச்சணந்தி
- இந்நூலை முடிப்பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று கூறுவர்.
- போப் கிரேக்க காவியம் இலியட், ஒடிசிக்கு நிகரான காப்பபியம் சீவக சிந்தாமணி என ஒப்பிட்டுள்ளார்.
- வடமொழியில் உள்ள சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஜீவந்தா சம்பு ஆகிய நூல்களின் தழுவல் சீவக சிந்தாமணி என்பர்
- சீவகனின் தாய் அவனை சுடிகாட்டிற் பிறந்தவுடன் புலம்பிக் கூறுவதால் இந்நூலுக்கு இப்பெயர் வந்தது.
- இந்நூலின் எண்வகை மெய்பாடுகளும், போர்முறை நெறிகளும், இல்ல இன்பங்களும், இசைச் சிறப்பியல்பும், ஐந்திணை ஒழிற் காட்சி இயக்கங்களும் சிறப்பாக கூறப்பட்டள்ளன.
- இந்நூலின் நோக்கம் சமணசமயக் கருத்துகளை பரப்புவது
- பல்லவ காலத்தில் இயற்றப்பட்டது.
- சைவரான நச்சினார்கனியார் உரை எழுதியுள்ளார்.
- (He is a Prince amoung the Tamil Poets) தமிழ் கவிஞர்களின் இளவரசன் என்று திருத்தக்கத் தேவரை ஜி.யு.போப் பாராட்டியுள்ளார்.
மேற்கோள்கள்
| வீழ்ந்து வெண்மழை தவழும் விண்ணுற பெருவரை பெரும்பாம்பு ஊழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற் றருவி தாழ்ந்து வீழந்தவை முழவின் ததும்பின் மதுகரம் பாடச் சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத்தனவே. |
No comments:
Post a Comment