பெண்கல்வி பற்றிய முக்கிய செய்திகள் பகுதி 1? || TNPSC GK AND TNPSC TAMIL
14. ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன் முதலாக பெண்களுக்கான பள்ளியை தொடங்கிய மாநிலம்?
Answer: மராட்டிய மாநிலம்
15. சமூகத் தன்னார்வலர் தடைகளை மீறிக் கல்வி கற்று பண்டிதராகியவர் யார்?
Answer: பண்டித ரமாபாய்
16. தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர் திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர் யார்?
Answer: மூவலூர் இராமாமிர்தம்
17. தேவதாசிமுறை ஒழிப்பு சட்டம் இயற்ற காரணாமாக இருந்தவர் யார்?
Answer: மூவலூர் இராமாமிர்தம்
18. தமிழக அரசு 8ம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யார் பெயரில் வழங்கி வருகிறது?
Answer: மூவலூர் இராமாமிர்தம்
19. பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில், தமிழகத்திற்கு வந்து, மருத்துவராக வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் யார்?
Answer: ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
20. இந்தியாவில் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவி இதுவரை 80ஆயிரம் குழந்தைகள் கல்வி பெற உதவியவர் யார்?
Answer: கைலாஷ் சத்யார்த்தி
21. கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு?
Answer: 2014
22. பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமென போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது?
Answer: 12 (1997)
23. மலாலா நோபல் பரிசு பெற்ற ஆண்டு?
Answer: 2014
24. 1848இல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் யார்?
Answer: சாவித்திரிபாய் பூலே
25. இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியர் யார்?
Answer: சாவித்திரிபாய் பூலே
26. பட்டமேற்படிப்புக்கான இலவச கல்வி உதவித்தொகை திட்டம் யார் பெயரில் வழங்கப்படுகிறது?
Answer: ஈ. வெ. ரா. நாகம்மை
27. சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் எதனுடன் தொடர்புடையது?
Answer: கல்வி, திருமண உதவித் தொகை
28. தனித்தமிழில் சிறந்து விளங்கியவர் யார்?
Answer: நீலாம்பிகை அம்மையார்
29. மறைமலையடிகளின் மகள் யார்?
Answer: நீலாம்பிகை அம்மையார்
30. நீலாம்பிகை அம்மையார் எழுதிய நூல்கள்?
Answer: தனித்தமிழ் கடடுரை, வடசொல் - தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர்
31. மகளிர் கல்வியை வலியுறுத்திய கோத்தாரி கல்வி குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
Answer: 1964
32. சாரதா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
Answer: 1929
No comments:
Post a Comment