Sunday, April 16, 2023

டிஎன்பிஎஸ்சி தேர்வு அதிகமாக முறைகேடுகள் நடக்கிறதா? தேர்வு வாரியம் கொடுத்த முக்கியமான விளக்கம்!

tnpsc news

டிஎன்பிசி தேர்வுகளில் ஏங்கேனும் ஏதாவது ஒரு இடத்தில் நடக்கும் தவறுகளால் ஒட்டுமொத்த தேர்வாணையத்தின் நடவடிக்கைகளிலும் சந்தேகம் கொண்டு பார்ப்பது என்பது தற்பொழுது வாடிக்கையாக்கிவிட்டது. 

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்த TNPSC குரூப் 2 முதன்மை தேர்வில் ஏற்பட்ட தொடர்புடைய காரணமாக அதனை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஒருவர் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளார். 

அதில் விரைவில் மறு தேர்வு நடத்த. உத்தரவிட வேண்டும் என கோரி  விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் க.கருப்பையா என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், “பதிவெண் மாறியதால், தாமதமாக தேர்வு தொடங்கியதால், தேர்வு அறையில் இருந்து வெளியே வந்த மாணவர்கள், மொபைல் போன் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு விடைகளை கேட்டது மற்றும் புத்தகங்களை பார்த்து விடைகளை தெரிந்து கொண்டனர்”  என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில், TNPSC செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 26ம் தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

No comments:

Post a Comment