Friday, April 28, 2023

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: ரூ. 1 லட்சம் வரை மாதச் சம்பளம் !

tnpsc jobs

 தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய  இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையயம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்குறிய கடைசி நாள் 26.05.2023 ஆகும்.


காலியிடங்கள் எண்ணிக்கை: 31


வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவு விண்ணப்பதாரர், 01.07.2023 அன்று 18 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏனைய பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு இல்லை.


கல்வித் தகுதி: தடவியல் அறிவியல்  படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்


(அல்லது)


இயற்பியல், வேதியியல், உயிரியியல், இயற்பியல் & வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ.36,900 – 1,35,100/-(நிலை-18)


தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் வாய்மொழித் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், பணியிட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு முறை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வுக்கான பாடத்திட்டம் :


விண்ணப்பம் செய்வது எப்படி: விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் எண் மூலம்ஒருமுறைப்பதிவு எனப்படும் நிரந்தரப்பதிவு (OTR) மற்றும் தன்விவரப்பக்கம் (Dashboard) ஆகியன கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவுக்கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஒருமுறைப்பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை நடைமுறையிலிருக்கும், தங்களுக்குரிய ஒரு முறைப் பதிவு கணக்கு (One Time Registration ID) மற்றும் கடவுச் சொல் மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment