Thursday, December 22, 2022

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. கால அவகாசம் நீட்டிப்பு – கல்வி தகுதியில் மாற்றம்!

 TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. கால அவகாசம் நீட்டிப்பு – கல்வி தகுதியில் மாற்றம்!

TNPSC ஆனது உளவியல் உதவி பேராசிரியர் மற்றும் மருத்துவ உளவியலாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி, கடைசி தேதி ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.


கால அவகாசம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ( TNPSC ) உளவியல் உதவிப் பேராசிரியர் மற்றும் மருத்துவ உளவியலாளர் பணியில் காலியாக இருக்கும் 24 இடங்களில் தகுதியான நபர்கள் கொண்டு நிரப்புவதற்கு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இப்பணியிடத்தில் விண்ணப்பிக்க சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.


Exams Daily Mobile App Download

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட கல்வித்தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Psychology பாடப்பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் M.Phil அல்லது Clinical Psychology பிரிவில் Ph.D பட்டம்/ Medical Psychology/Social Psychology/Clinical Psychology ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வாகனம் நிறுத்தும் இடத்தில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு – மாநில அரசின் புதிய திட்டம்!


Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதையடுத்து இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 14ம் தேதி அன்று கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு வருகிற ஜனவரி 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களை திருத்துவதற்கு 25.01.2023 முதல் 27.01.2023 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


Notice PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes


No comments:

Post a Comment