Friday, December 23, 2022

1,754 பணியிடம் தானா? டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையால் தேர்வர்கள் அதிருப்தி..விளக்கம் அளித்த தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி ஆண்டு தேர்வு அட்டவணை அண்மையில் வெளியானது. 


இதில் ஒராண்டில் 10 போட்டித்தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


இது போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வந்தவர்களுக்கு பெரும் அதிருப்தியை கொடுத்தது. இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அடுத்த ஆண்டில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது.


இதில் வெறும் 1,754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப் பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. 


அரசுப்பணி கனவுகளோடு படித்து வரும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது.


 

No comments:

Post a Comment