2023ம் ஆண்டுக்கான போட்டி தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி விளக்கம்

Kanmani
0

 சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி 2023ம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிட்டதில் ஓராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன என சமூக ஊடகங்களிலும் சில பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது.


 ஊடகங்களில் வெளியான தகவல்கள் முழுமையாக இல்லாததால், தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் நிலையில், அவற்றை மறுத்து, பின்வரும் விவரங்கள் வெளியிடப்படுகின்றன. 


ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த அட்டவணை முதற்கட்டமாக  தகவல்களை அளிக்கும் அட்டவணையாகும். இது தொடர்ந்து கூடுதல் பணியிடங்களுக்கான கேட்புகள் பெறப்பட்டு அட்டவணையில்  சேர்த்து  வெளியிடப்படும்.


இதுமட்டுமன்றி ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மற்றும் வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆகியவற்றின் வாயிலாகவும் அரசுப் பணியிடங்களுக்கான தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


அரசு வேலைவாய்ப்பகங்கள் வாயிலாகவும், பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. இவை தவிர, கருணை அடிப்படையிலான பணிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. 


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், மொத்தம் 1,063 முகாம்கள் நடத்தப்பட்டு, 1,12,551 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  


சில போட்டித் தேர்வுகளின் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு வருவதும், அப்பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் காலதாமதத்திற்கு ஒரு காரணமாகும். 


அவ்வாறு வழக்குகள் தொடரப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ள உரிய விதிகளும்  இந்த  அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, உரிய விதி திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 


அரசுத் துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களை முறையாக நிரப்புவதற்கான தொடர் நடவடிக்கையை இந்த அரசு கட்டாயம் மேற்கொள்ளும் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top