Sunday, November 27, 2022

TNPSC குரூப் 4 தேர்வு; தோராய கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

tnpsc group 4 cutoff marks 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்து தேர்வர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.  குரூப்-4 கட் ஆஃப் எவ்வளவு நிர்ணயமாக வாய்ப்பு இருக்கிறது என்பதை இங்கு காணலாம்.


முன்னதாக, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி வெளியிட்டது. 7,301 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 22 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில், 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். சுமார் 3.5 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக, தேர்வாணையம் வெளியிட்ட உத்தேச கால அட்டவணையில், தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 இருப்பினும், அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனால், ஏற்பட்ட கால தாமதம் காரணமாக குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதட்தில் வெளியிடப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துளளது.

No comments:

Post a Comment