டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுகள் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடந்த ஆண்டுக்கான கட் ஆஃப் எவ்வளவு என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் துணை ஆட்சியர் (Deputy Collector) காவல் துணை கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police), உதவி ஆணையர், வணிக வரித்துறை (Assistant Commissioner (Commercial Taxes)), துணைப் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் (Deputy Registrar of Cooperative Societies), உதவி இயக்குனர், ஊரக வளர்ச்சி துறை (Assistant Director of Rural Development), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer) போன்ற பதவிகள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில், முதல்நிலைத் தேர்வு வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த ஆண்டு முதல்நிலைத் தேர்வு கட் ஆஃப் மதிப்பெண் விவரங்களை இப்போது பார்ப்போம். இது தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு மிகுந்த பயன் தரக்கூடும். கடந்த ஆண்டைப்போல் இல்லாமல் இடஒதுக்கீட்டு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், தேர்வர்கள் எத்தனை வினாக்களுக்கு விடையளித்தால், முதன்மைத் தேர்வுக்கு தயாராகலாம் என்பதை தெரிந்துக் கொள்ள இந்த கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள் உதவும்.
இந்த கட் ஆஃப் விவரங்களை ஆர்.டி.ஐ மூலம் தேர்வாணையத்திடம் இருந்து பெற்றதாக ரேடியன் ஐ.ஏ.எஸ் அகடமி நிறுவனர் ராஜபூபதி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குரூப் 1 கட் ஆஃப்
CATEGORY | MARKS | NO. OF QUESTIONS |
GT_ G | 217.50 | 145 |
GT_ PSTM | 204 | 136 |
GT_ LV | 156 | 104 |
GT_ W | 210 | 140 |
GT_ PSTM | 192 | 128 |
BC_OM_G | 208.50 | 139 |
BC_OM_PSTM | 189 | 126 |
BC_OM_LV/VI | 141 | 94 |
BC_OM_W | 202.50 | 135 |
BCM_G | 192 | 128 |
MBC/DC_G | 205.50 | 137 |
MBC/DC_PSTM | 195 | 130 |
MBC/DC_W | 199.50 | 133 |
MBC/DC_W_PSTM | 178.50 | 119 |
SC_G | 201 | 134 |
SC_PSTM | 180 | 120 |
SC_W | 189 | 126 |
SCA_G | 195 | 130 |
ST_G | 174 | 116 |
No comments:
Post a Comment