Sunday, October 2, 2022

நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு கட் ஆஃப் மற்றும் ரிசல்ட் இப்படிதான் இருக்குமாம் !

tnpsc group 4 results

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு; கட் ஆஃப் கூடுமா? குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு எப்படி இருக்கும்? கூடுமா? குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. 

இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப தேர்வு செயல்முறைகளில் தேர்வாணையம் மாற்றங்கள் செய்து வருவதாகவும், எனவே தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்படலாம் என்றும் சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இடஒதுக்கீடு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு தேர்வு செயல்முறைகளில் மாற்றங்களை செய்ய உத்தரவிட்டுள்ளதால், தேர்வாணையம் அதற்கு ஏற்றாற்போல் மாற்றங்களைச் செய்து வருகிறது. 

எனவே கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிச்சயம் பொதுப்போட்டியில் கட் ஆஃப் குறைவாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

மேலும், தமிழக அரசுத் துறைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குரூப் 4 தேர்வில் நிரப்பப்படும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், அதாவது அறிவிக்கப்பட்ட இடங்களை விட, சுமார் 2000 இடங்கள் வரை கூடுதலாக நிரப்பப்பட வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவும் கட் ஆஃப் குறையும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே நிபுணர்கள் கூற்றுப்படி, இந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. 

மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.

முதலில் இளநிலை உதவியாளர் மற்றும் வி.ஏ.ஓ பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பார்ப்போம். இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 162 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 160 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 158க்கு மேலும், SC பிரிவினருக்கு 155க்கு மேலும், 

BCM பிரிவினருக்கு 156க்கு மேலும், SCA பிரிவினருக்கு 150க்கு மேலும், ST பிரிவினருக்கு 145 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 1-2 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

தட்டச்சர் பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 158 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 154 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 152க்கு மேலும், SC பிரிவினருக்கு 147க்கு மேலும், BCM பிரிவினருக்கு 150க்கு மேலும், SCA பிரிவினருக்கு 142க்கு மேலும், ST பிரிவினருக்கு 135 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 1-2 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 148 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 144 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 145க்கு மேலும், SC பிரிவினருக்கு 132க்கு மேலும், BCM பிரிவினருக்கு 142க்கு மேலும், SCA பிரிவினருக்கு 128க்கு மேலும், ST பிரிவினருக்கு 120 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 1-2 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் 3-4 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 3-4 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment