Friday, April 2, 2021

ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேசன் செய்வது எப்படி?


தளத்திற்கு செல்லுங்கள் அங்கே one time registration என்று குறிப்பிடப்பட்டுள்ளதை க்ளிக் செய்யுங்கள். அடுத்த பக்கத்தில் விண்ணப்ப படிவம் இருக்கும்.


அப்படிவத்தில் தங்கள் பெயர், தந்தையார் பெயர்,தாயார் பெயர்,கணவர் அல்லது மனைவி பெயர்,நீங்கள் பிறந்த இடம்,தந்தையார் பிறந்த இடம், உங்கள் தாய்மொழி உள்ளிட்டான விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும் மட்டுமின்றி உங்கள் இனம், மதம், சாதி, சாதி உட்பிரிவு, சாதி சான்றிதழின் எண், எந்த வருடம் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு படித்தீர்கள் என்ற விபரங்களும் கேட்கப்பட்டு இருக்கும்  அவற்றையும் தவறின்றி குறிப்பிட்டு விடுங்கள்.


விண்ணப்பத்தின் இறுதியில் உங்கள் புகைப்படத்தையும் உங்கள் கையொப்பத்தையும் உள்ளிட வேண்டும்.


உங்கள் கணிப்பொறியிலிருந்து அந்த இரண்டையும் தரவேற்றம் செய்யவேண்டும். அதுமட்டுமில்லாமல் புகைப்படம் 3.5 cm x 4.5 cm (20 KB –50 KB) அளவிற்குள்ளும் உங்களது கையொப்பம் 3.5 cm x 1.5 cm (10 KB –20 KB) என்ற அளவிற்குள்ளும் இருக்குமாறு வடிவமைத்த பிறகே அவற்றை நீங்கள் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய இயலும். 


ஒரு வெள்ளைத் தாளில் உங்களது கருப்பு மை பேனா பயன்படுத்தி கையொப்பத்தை போட்டு அதையும் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்.


அவ்வளவுதான். இப்போது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முடித்தபின்பு அளவு குறைக்கப்பட்ட போட்டோவையும் கையொப்பத்தையும் விண்ணப்பத்தில் பதிவேற்றிவிடுங்கள்.


பின்னர் மீண்டும் ஒருமுறை விபரங்களை சரி பார்த்துக் கொண்டு பின்னர் எந்த வழியில் பணத்தை செலுத்துகிறீர்களோ அதை தேர்வு செய்துவிட்டு  விண்ணப்பத்தை submit செய்து விடலாம்.


விண்ணப்பம் முழுமையாக பூர்த்தியாகியிருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். (எ.கா.நீங்கள் மாற்று திறனாளியா? எனக் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு, இல்லை என்றால் இல்லை என்பதை தெரிவு செய்ய செய்யவேண்டும்)


உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட்ட பிறகு அடுத்தப் பக்கத்தில் உங்கள் விண்ணப்பம் தயார் அதை PDF file லாக சேமித்துக் கொள்ளும்படி கேட்கும் அதை மறக்காமல் நீங்கள் சேமித்துக்   கொள்ளுங்கள். 


பின்பு உங்கள் ஈமெயில் முகவரியில் சென்று பார்த்தால் உங்களுக்கென ஒரு பயனர் பெயரும் ரகசிய எண்ணும் வந்திருக்கும் அதை குறித்து வைத்துக் கொள்ளவும்.

One Time Registration

No comments:

Post a Comment