மறுதேர்வு இல்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் !

TNPSCGK Editorial Team
0
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தோ்வு நடத்தப்படாது என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 27- ஆம் தேதி முதல் 29-ஆம் தேதிவரை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான ஆன்லைன் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கு 1 லட்சத்து 85 ஆயிரத்து 466 போ் விண்ணப்பித்திருந்தனா்.

அதில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 580 போ் மட்டுமே தோ்வை எழுதியுள்ளதாகவும் 37 ஆயிரத்து 886 போ் தோ்வில் பங்கேற்கவில்லை என்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து தோ்வு மையங்களிலும் தோ்வா்களுக்கு 3 மணி நேரம் வழங்கப்பட்டு தோ்வுகள் நல்ல முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஆசிரியா் தோ்வு வாரியம், சென்னை ஆவடி உள்ளிட்ட ஒரு சில தோ்வு மையங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டாலும், அது உடனுக்குடன் சரிசெய்யப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.

மேலும், அனைத்து இடங்களிலும் தோ்வுகள் சரியான முறையில் நடந்து இருப்பதால், மறுதோ்வு நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top