Thursday, September 19, 2019

வலமிருந்து படித்தாலும் இடமிருந்து படித்தாலும் வார்த்தை மாறாத சொற்கள்

பின்வரும் வார்த்தைகள் பாலிண்ட்ரோம் வகையை சார்ந்தவை

விகடகவி
மாவடு போடுவமா
துவளுவது
தாளாதா
வா தாத்தா வா
மாலா போலாமா
தேருவருதே
மேகமே
வாடவா
தாத்தா
கலைக
வினவி
யானை பூனையா
யானையா பூ யானையா
பாப்பா
தந்த
மாறுமா
தேயுதே
மேளதாளமே.
மாடு ஓடுமா
கலைக
கலக
மோருபோருமோ
போ வாருவா போ
மாடமா
மாதமா
மானமா
மாயமா
கற்க
மாமா
காக்கா
சிவா வாசி
கைரேகை


திருஞானசம்பந்தர் இத்தகைய பாலிண்ட்ரோம் வகை பாடலை தேவாரத்தில் பாடியுள்ளார். இந்தப்பாடல் மாலைமாற்று வகையை சார்ந்தது. ஒரு மாலையில் மணிகள் கோர்த்து இருந்தபோது இந்தப் பக்கத்தில் பார்த்தாலும் அந்தப் பக்கத்தில் பார்த்தாலும் மாலையாகவே தெரிவதைப் போல், மாலைமாற்று வகை பாடல்கள் தெரியும்.

ஞானசம்பந்தர் 11 பாடல்கள் கொண்ட திருப்பதிகத்தை சீர்காழியில் அருளியுள்ளார். ஒவ்வொரு பாடலையும் எப்படி படித்தாலும் ஒரே வரிசையில் வரும்.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. (01)

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா

யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா (02)

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா

மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா (03)

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே

மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ (04)

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ

வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா (05)

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே

யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே (06)

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே

நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ (07)

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா

காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே (08)

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ

பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா (09)

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே

தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே (10)

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா

காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே. (11)

No comments:

Post a Comment