ஜூலை -2018 மாத நடப்பு நிகழ்வுகள்

ü ஜூலை 1- GST தினம்.
ü வழக்குரைஞராக பதிவு செய்த திருநங்கை – சத்யஸ்ரீ சர்மிளா(ராமநாதபுரம் மாவட்டம்)
ü மும்பை விக்டோரியா கட்டடத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது.
ü சமீபத்தில் 35 வது தேசிய நீச்சல் போட்டி – புனேவில் நடத்து,இதில் தமிழக வீரர்-வீசேஸ் பரமேஸ்வர் சர்மா தங்கம் வென்றார்.
ü இராமாயண நூலை உருதில் மொழி பெயர்த்த முஸ்லிம் பெண் –மகி தலக் சித்திக்(கான்பூர்)

ü சுவிடனை சேர்ந்த மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்ஸன்-டெல்லி IITயுடன் இணைத்து முதல் 5G பரிசோதனை மையத்தை அமைத்துள்ளது.
ü புதிய கல்வி குழுவின்தலைவர் – கஸ்துரி ரங்கன்
ü ஜீன் ஔஷித்தி என்றால் – ஜென்ரிக் மருந்து திட்டம்.
ü 9-7-2018 தமிழகத்தில் லோக் ஆயுக்த் மசோதா நிறைவேறியது.
ü செல்போன் தயாரிப்பில் இந்தியா இரண்டாம் இடம்
ü ஆசிய கோப்பை வில் வித்தை போட்டி – தைபே யில் நடந்தது. இதில் இந்தியா மூன்றாவது இடம்.
ü உலக மக்கள் தொகை தினம் – ஜூலை 11
ü “குடும்பக்கட்டுப்பாடு என்பது மனித உரிமை“என்பது இந்தாண்டு ஐ.நா வின்  கருப்பொருள்.
ü தற்போது இந்தியாவின் மக்கள்தொகை-135 கோடி.
ü சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை அதன் 200வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த மருத்தவமனை 1819 இல் டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட் தொடங்கப்பட்டது.
ü புதிய உச்சத்தில் மும்பை பங்கு சந்தை – 12-july-2018 நிப்டி 11,000 புள்ளியை தொட்டது.
ü ஜூலை – 15 காமராஜர் பிறந்ததினம் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டப்பட்டது.
ü உலக ஜூனியர் தடகளப்போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதி போட்டியில் ஷிமா தாஸ்(அசாம்) தங்கம் வென்றார். இப்போட்டி  பின்லாந்தின்-டாம்பரே நகரில் நடந்தது.

Post a Comment

0 Comments