20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம் முழுவதும் 20 லட்சத்துக் கும் மேற்பட்டோர் எழுதியிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக் கான மதிப்பெண் மற்றும் தரவரிசை இணையதளத்தில் நேற்று வெளி யிடப்பட்டது. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் (கிரேடு-3), மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பல்வேறு பதவிகளில் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்த தேர்வை 20 லட்சத் துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தேர்வில் பொது அறிவு மற்றும் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து ‘‘அப்ஜெக்டிவ்” முறையில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு வினாவுக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

குரூப்-4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் களில் பொறியியல் பட்டதாரிகளும் அடங்குவர்.

தேர்வு முடிந்து 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில், குரூப்-4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று மாலை வெளியிடப்பட்டது.

20 லட்சம் பேர் தேர்வு எழுதியிருப்பதால் அனை வரும் ஒரேநேரத்தில் மதிப்பெண் விவரங்களை பார்க்க முயற்சிக் கும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் வாய்ப்பை கருத்தில் கொண்டு முதல்முறையாக 2 சர்வர் கள் மூலம் முடிவுகளை அறிந்து கொள்ள டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மதிப்பெண் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக விரைவில் தேர்வுமுடிவுகள் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கு நேர்காணல் கிடையாது. எனவே, எழுத்துத்தேர்வில் வெற்றி பெற் றாலே ஏதேனும் ஓர் அரசு பணி வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.h

Post a Comment

0 Comments