காலச்சுவடுகள் 2016 | நிகழ்வுகள் | உலகம்

உலகம்:ஜனவரி
2     சவூதி அரேபியா அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு நெருக்கடி கொடுத்து வந்த ஷியா பிரிவு மதகுரு நிமர் அல் நிமர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 46 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
6     வட கொரியா அரசு சிறியரக ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதாக அறிவித்தது.
7     லிபியாவின் ஸிலிடன் நகரில் நிகழ்த்தப்பட்ட லாரி வெடிகுண்டு தாக்குதலில் 60 காவலர்கள் கொல்லப்பட்டதுடன், 200 பேர் பலத்த காயமடைந்தனர்.
7      சவூதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை பயன்படுத்துவதற்கு ஈரான் அரசு தடை விதித்தது.
12    துருக்கி இஸ்தான்புல்லில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானோர்  ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள்.
16    தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜனநாயக முன்னேற்ற கழகத்தின்  தலைவர் சாய்-இங்வென் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
17    சர்வதேச அணுசக்தி கழகத்தின் விதிமுறைகளை   ஏற்றுக் கொண்டதையடுத்து ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டது.
18    பாகிஸ்தானின் பலூச் மாகாண தேசியவாத தலைவர் நவாப் அக்பர் கான் புகட்டி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஷராப் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
20    துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டுக்கு புகலிடம் தேடிச் சென்றவர்களின் படகு நடுக்கடலில் மூழ்கியதில் 20 குழந்தைகள் உள்பட 44 பேர் உயிரிழந்தனர்.
30    நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் இரண்டாவது மகன் யோஷிதா ராஜபட்ச கைதானார்.
31    சிரியா தலைநகர் டமாஸ்கஸில் தற்கொலைப்படை நிகழ்த்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்; 110 பேர் காயமடைந்தனர்.

பிப்ரவரி
7     வட கொரியா, சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை மீறி  நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ராக்கெட்டை ஏவியது.
11     இயற்பியல்-வானவியல் சரித்திரத்தின் முக்கிய நிகழ்வாக ஈர்ப்பு அலைகள் இருப்பதற்கான முதல் நேரடி தடயத்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்தது.
15    சிரியாவில் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது ரஷியா வான்வழித்தாக்குதல் நிகழ்த்தியதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை பதிவு செய்தது.
21    சிரியா தலைநகரில் ஷியா பிரிவினருக்கு சொந்தமான மசூதி ஒன்றில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
24    நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.

மார்ச்
2    ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலலாபாத் நகரில் உள்ள இந்திய தூதகரத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்பு படை அதிகாரி உள்பட மூன்றுபேர் உயிரிழந்தனர்.
6    இராக் தலைநகர் பாக்தாதில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அருகே ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
15    மியான்மரில் 1962-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ராணுவ பின்புலம் இல்லாதவரான ஹிடின் கியா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
20    90 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு கம்யூனிஸ நாடான கியூபாவுக்கு   அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
22 பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததுடன், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மார்ச் 27: பாகிஸ்தானின் லாகூர் நகர பூங்காவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்; 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏப்ரல்
3    சர்வதேச நாடுகளின் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்து சேர்த்ததற்கான முக்கிய ஆவணங்கள் "பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியாகின.
5    அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்ட 10 இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட 21 பேரை சட்ட அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
8    இந்தியாவில் ஹெலிகாப்டர் விற்பனை செய்வதற்காக ஊழலில் ஈடுபட்ட ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜியுசெப்பி ஓர்ஸிக்கு இத்தாலி நீதிமன்றம் நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
16    ஈக்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு 400 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.8  என பதிவானது.
19    சிரியாவில் அல்-நுஸ்ரா பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திலிப் மாகாணப் பகுதியில் அரசு படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
21    பாலியல் அடிமைகளாக மாற மறுத்த 250 பெண்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றினர்.
27    கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலகிலேயே மிகச் சிறிய தெர்மாமீட்டரை உருவாக்கினர். இது, மனிதனின் தலைமுடியை காட்டிலும் 20,000 மடங்கு சிறியதாகும்.

மே
7     லண்டனின் மேயராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சாதிக் கான் பதவியேற்றார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் லண்டன் மேயராவது இதுவே முதல்முறை.
9    வட கொரியா ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக கிம்-ஜோங் உன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
17    தென் கொரியாவைச் சேர்ந்த நவாலாசிரியர் ஹேன் கங்க் எழுதிய "தி வெஜிடேரியன்' நாவல் புக்கர் விருதை தட்டிச் சென்றது.
22    அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் பாகிஸ்தானில் நிகழ்த்திய அதிரடித்  தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.
29    மத்திய தரைக்கடல் பகுதியில் 7 நாள்களில் 3 கப்பல்கள் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 700க்கும் மேற்பட்ட லிபிய அகதிகள் பலியானதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தகவல் வெளியிட்டது.

ஜூன்
6    காமன்வெல்த் நாடுகளுக்கு இடையிலான சிறுகதை போட்டியில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் பராசர் குல்கர்னி முதல் பரிசு வென்றார்.
7    மும்பையில் 2008-இல் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதை சீனா முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டது.
9    மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக, அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீபுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
12    அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களின் விருந்து நிகழ்ச்சியில், இஸ்லாமிய பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
30    இந்தியாவின் சூரியஒளி மின்உற்பத்தி திட்டங்களுக்காக, ரூ.6,700 கோடி நிதியுதவி வழங்கப்படும் என உலக வங்கி அறிவித்தது.

ஜூலை
3     இராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை படை தாக்குதலில் 125 பேர் உயிரிழந்தனர்.
6    பாராஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான தென்னாப்பிரிக்க தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸூக்கு, காதலியை கொன்ற வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
13    "பிரெக்ஸிட்' வாக்கெடுப்பு முடிவுகள் எதிரொலியாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக தெரஸாமே பதவியேற்றார். பிரிட்டனில் பிரதமர் பதவியேற்கும் 2-ஆவது பெண் இவராவார்.
15    பிரான்ஸின் நைஸ் நகரில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தின்போது, மக்கள் கூட்டத்துக்குள் சரக்கு லாரியை அதிவேகமாக செலுத்தி ஐ.எஸ். பயங்கரவாதி நிகழ்த்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட்
3     நேபாள பிரதமராக மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா இரண்டாவது முறையாக தேர்வானார்.
8    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மருத்துவமனையில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர்.
12    ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரான ஹஃபீஸ் சயீத் கான், ஆப்கனில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.
24    இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 250 பேர் பலியாகினர்.
25    ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் "ரோபோ டாக்ஸி' சேவை, உலகிலேயே முதல் முறையாக சிங்கப்பூரில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
26    இந்தியாவுக்காக பிரான்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் அதிநவீன "ஸ்கார்பீன்' ரக நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியத் தகவல்கள், ஆஸ்திரேலிய ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

செப்டம்பர்
3    போர்க் குற்றங்களுக்காக, வங்கதேச ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் முக்கிய தலைவர் மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டார்.
4    வாடிகன் நகரிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், அன்னை தெரஸôவை புனிதராக பிரகடனப்படுத்தினார் போப் பிரான்சிஸ்.
17    ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, பின்னர் அவர்களிடமிருந்து தப்பிய ஈராக் இளம்பெண் நாடியா முராத் பாஸி தாஹா (23), ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா. தூராக நியமிக்கப்பட்டார்.
27    மரபியல் நோய்களில் இருந்து குழந்தைகளை காப்பதற்காக, தாய்-தந்தை மரபணுவுடன் மூன்றாவது ஒரு நபரின் மரபணுவையும் கருவில் இணைக்கும் புதிய மருத்துவ நுட்பத்தை பயன்படுத்தி முதல் ஆண் குழந்தை பிறந்தது.

அக்டோபர்
8    ஹைதி தீவில் "மேத்யூ' புயல் தாக்கியதில் 900 பேர் உயிரிழந்தனர்.
19    நண்பரை கொலை செய்த வழக்கில், சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த துர்க்கி பின் சவூத் அல்-கபீருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
20    வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனுக்கள் தொடர்பாக அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
31    வங்கதேசத்தின் பிரமன்பாரியா மாவட்டத்தில், இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக 100க்கும் மேற்பட்ட ஹிந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டதுடன், 15 ஹிந்து கோயில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
நவம்பர்
 4    புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக பாரீஸ் பருவநிலை மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில், இந்தியா உள்ளிட்ட 96 நாடுகள் முறைப்படி இணைந்ததையடுத்து, அந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
9    அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து, குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவர், அமெரிக்காவின் 45ஆவது அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
25    கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ (90) மறைந்தார்.
28    கொலம்பியாவின் மெடில்லின் நகர் அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பிரேசில் கால் பந்து அணியினர் உள்பட 81 பேர் உயிரிழந்தனர்.
29    பாகிஸ்தான் ராணுவ புதிய தலைமை தளபதியாக குவாமர் ஜாவத் பாஜ்வா பொறுப்பேற்றார்.
டிசம்பர்
1    தாய்லாந்து புதிய மன்னராக மஹா வஜிரலங்காரன் (64) பதவியேற்றார்.
7    பாகிஸ்தானின் அபோதாபாத் அருகே அந்நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் பலியாகினர்.
12    பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தார் நியமிக்கப்பட்டார்.
19    அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்யும் அமைப்பான எலெக்டோரல் காலேஜ் எனப்படும் மாகாணங்கள் வாரியான "தேர்வு செய்வோர் அவை' மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக 304 வாக்குகளும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக 227 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம், அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிகார பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.

கண்ணோட்டம் 2016 - தமிழ் சினிமாஜனவரி
1    மத்திய தணிக்கை குழு செயல்படுவதை கண்காணிக்க ஷியாம் பெனகல்   தலைமையில் மத்திய தணிக்கை குழு அமைப்பு. பின்னர் கமல்ஹாசன் உள்ளிட்ட சிலர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டனர்.
23    நடிகை அர்ச்சனாகவி - அபிஸ்மேத்யூ திருமணம்.
28    நடிகர் நகுல் - ஸ்ருதி பாஸ்கர் திருமணம் நடைபெற்றது.
ஏப்ரல்
11    கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு படமாகி வருகிறது.  ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்கும் இந்தப் படத்தில் சச்சினாக நடிக்க இருப்பது சச்சினேதான்.   சிறுவயது சச்சின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது அவரது மகன் அர்ஜீன்.
 ஜூன்
5    பின்னணி பாடகர் பென்னி தயாள் - கேத்ரீன் திருமணம்.
 ஜூலை
14    தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தின் மாடிப் படியில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த கமல்ஹாசனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
22    பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை ராதிகா ஆப்தே நடித்து வெளியான கபாலி படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது.
ஆகஸ்ட்
6    காதல் மணம் புரிந்து கொண்ட இயக்குநர் விஜய் - நடிகை அமலாபால் இருவரும் விவகாரத்து பெற்றனர்.
 செப்டம்பர்
16    இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிஸி இருவரும் விவகாரத்து பெற்றனர்.
22    இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களில் தமிழ் படமான விசாரணை இடம் பிடித்தது. பல ஆண்டு இடைவெளிக்குப் பின் ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப் படம் இது.
23    எம்.எஸ்.தோனி - தி அன் டோல்ட் ஸ்டோரி  திரைப்படம்  தமிழில் வெளியாவதை முன்னிட்டு சென்னை வந்திருந்த கிரிக்கெட் வீரர் தோனி, படத்தில் நடித்த நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்தார்.
நவம்பர்
1    சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு பாராட்டி ஒன்றாக வாழ்ந்து வந்த கமல்ஹாசன் - கௌதமி பிரிந்தனர்.
7    கன்னட பட படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் நடிகர்கள் அனில் மற்றும் உதய் இருவரும் விபத்துக்குள்ளாகி இறந்தனர்.
14    தயாரிப்பாளர் சங்கம் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்த நடிகர் விஷால் அச்சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.
25    நடிகை காவ்யாமாதவன் - நடிகர் திலீப் திருமணம்.
27    ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நடிகர்கள் சரத்குமார், ராதாரவி இருவரையும் நீக்கி நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டிசம்பர்
23    ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா விவகாரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

விளையாட்டுஜனவரி
4    பிசிசிஐ மறுசீரமைப்புக்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட லோதா குழு, அமைச்சர்கள் பிசிசிஐ நிர்வாகிகளாக பதவி வகிக்கக் கூடாது, 70 வயதுக்கு மேற்பட்டோர் நிர்வாகிகளாக இருக்க முடியாது,  ஒருவர் தொடர்ந்து 3 முறை நிர்வாகியாக இருக்கக்கூடாது போன்ற பரிந்துரைகளை வழங்கியது.
5    மும்பையைச் சேர்ந்த பிரணவ் தனவாடே (15) என்ற சிறுவன் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் 327 பந்துகளில் 1009 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
9    பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸô-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. இது, சானியா-மார்ட்டினா ஜோடி தொடர்ந்து வெல்லும் 6-ஆவது பட்டமாகும்
10    சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா சாம்பியன். சென்னை ஓபனில் அவர் வென்ற 4-ஆவது பட்டம் இது.  முன்னதாக 2011, 2014, 2015 ஆகிய ஆண்டுகளிலும் அவர் பட்டம் வென்றிருந்தார்.
14    சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸôô-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, சீனாவின் சென் லியாங்-ஷுவாய் பெங் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் தொடர்ச்சியாக 28 வெற்றிகளைப் பதிவு செய்த இந்த ஜோடி, ஃபெர்னான்டஸ்-நடாஷா ஸ்வெரெவா இணையின் சாதனையை சமன் செய்தது.
18     பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 12 பந்துகளில் அரைசதம் அடித்து, இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்தார்.
29    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. இது, இந்த ஜோடி தொடர்ந்து வெல்லும் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அத்துடன், தொடர்ந்து 36 ஆட்டங்களில் வெற்றி பெற்ற பெருமையை இந்த ஜோடி பெற்றது.
30    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ûஸ வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.
31    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி பட்டம் வென்றார். இங்கு அவர் வென்ற 6-ஆவது பட்டம் இது. இதன்மூலம் ஆஸ்திரேலிய வீரர் ராய் எமர்சனின் சாதனையை சமன் செய்தார்.

பிப்ரவரி
14    இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மார்ச்
6    ஆசிய கோப்பை டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி, 6-ஆவது முறையாக பட்டம் வென்றது.
8    ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தார்.

ஏப்ரல்
3   டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்போட்டியின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

மே
10    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் ஆனதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் சஷாங்க் மனோகர்.
17    2008-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களில், 12 நாடுகளைச் சேர்ந்த 31 வீரர்/வீராங்கனைகள் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்தது.
29    2016-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஜூன்
4    சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி (74) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
12    ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால், 2-ஆவது முறையாக பட்டம் வென்றார்.
23    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். கடந்த 16 ஆண்டுகளாக இந்தப் பொறுப்பு வெளிநாட்டினரிடம் இருந்தது.
27    கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதன் கேப்டன் லயோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஜூலை
9    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில்  அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-ஆவது முறையாக பட்டம் வென்றார்.
10    யூரோ கோப்பை  கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ûஸ வீழ்த்தி பட்டம் வென்றது. போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ, காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை.
10    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே பட்டம் வென்றார்.
24    இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட்
6 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2-ஆவது போட்டியில் இலங்கை வெற்றி கண்டது. இது, கடந்த 17 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை பெற்ற முதல் வெற்றி.
14 ஒலிம்பிக் வரலாற்றில் மகளிர் ஜிம்னாஸ்டிக்ஸில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையான தீபா கர்மாகர், இறுதிச்சுற்றில் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டு 4-ஆம் இடத்தைப் பிடித்தார்.
15     ரியோ ஒலிம்பிக் ஆடவர் 100 மீ. ஓட்டத்தில் ஜமைக்க வீரர் உசேன் போல்ட் 3-ஆவது முறையாக தங்கம் வென்றார்.
17    ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
18    ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளி  வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

செப்டம்பர்
10    பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றார். அதே பிரிவில் இந்திய வீரர் வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
11அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில்  ஜெர்மனி வீராங்கனை ஏஞ்ஜெலிக் கெர்பர் பட்டம் வென்றார். இதன்மூலம் உலகின் முதல் நிலை வீராங்கனையாக உருவெடுத்தார்.
12 பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
14 பாரா ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா 63.97 மீ. தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.
25    டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர், சர்வதேச அளவில் 2-ஆவது வீரர் என்ற பெருமையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பெற்றார். அவர் தனது 37-ஆவது டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டினார்.

அக்டோபர்
3    கொல்கத்தாவில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது.
11    நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 321 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
21    லோதா குழு பரிந்துரைகளை முழுமையாக ஏற்கும் வரையில்பிசிசிஐ}மாநில கிரிக்கெட் சங்கங்கள் இடையிலான பணப்பரிவர்த்தனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
30    மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.
30    இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது, இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் பெற்ற முதல் வெற்றியாகும்.

நவம்பர்
20    சீனாவின் ஃபுஜௌ நகரில் நடைபெற்ற சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பட்டம் வென்றார். இது அவர் வென்ற முதல் சூப்பர் சீரிஸ் பட்டமாகும்.
21    பிசிசிஐ மறுசீரமைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பிசிசிஐ ஏற்க மறுப்பதாகக் கூறி, அதன் நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்யுமாறு லோதா குழு உச்ச நீதிமன்றத்தை நாடியது.
30    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினை வீழ்த்தி பட்டம் வென்றார்.

டிசம்பர்
2 ஃபார்முலா ஒன் கார் பந்தய போட்டியின் நடப்பு சாம்பியனான நிகோ ரோஸ்பெர்க் ஓய்வு.
12    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து க்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17    லோதா குழு பரிந்துரை அமல்படுத்தும் வகையில், மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் (76) ராஜிநாமா செய்தார்.
18    ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.
18    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் 2-ஆவது முறையாக அட்லெடிகோ டி கொல்கத்தா அணி சாம்பியனானது.
19    சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 190.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இது, ஒரு இன்னிங்ஸில் இந்தியா பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோராகும்.
19     இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் (303*)  அடித்தார். அவருடைய முதல் சதமே முச்சதமாக அமைந்தது.
20    இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா ஓர் இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
22    2016-ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் "சிறந்த கிரிக்கெட் வீரர்', "சிறந்த டெஸ்ட் வீரர்' ஆகிய விருதுகளை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பெற்றார்.
24    19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இலங்கையை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.
27    ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் ஒடிஸாஅணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வீரர் சமித் கோயல் (26), 723 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 359 ரன்கள் விளாசி புதிய உலக சாதனை படைத்தார்.

Post a Comment

0 Comments