Monday, October 17, 2016

TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 8

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.
1. முதல் விடுதலைப் போர் நடந்த ஆண்டு - 1857
2. "Runs Ruins" ஐ எழுதியவர் - கவாஸ்கர்
3. இல்பர்ட் மசோதாவை கொண்டு வந்தவர் - ரிப்பன் பிரபு
4. முகலாய ஆட்சியின் அரசவை மொழி - பாரசீகம்
5. தேசியக்கொடியின் நீளம், அகலம் - 3:2
6. புறா சின்னம் குறிப்பது - அமைதி
7. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு - 3.25,000 மைல்
8. வெள்ளை அல்லி எந்த நாட்டின் சின்னம் - கனடா
9. நீலபுத்தகம் எந்த நாட்டின் அரசாங்க புத்தகம் - இங்கிலாந்து
10. நாட்டின் கல் மைல் என்னும் சொல் எந்த வாகனத்தில் பயன்படுத்தப்படுகிறது - கப்பல்களில்
11. அன்னை தெரசாவுக்கு எதற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது - சமாதானம்
12. எந்த படைப்புக்கு இரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்றார் - கீதாஞ்சலி
13. உலக தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ILO) தலைமையகம் உள்ள இடம் - ஜெனிவா
14. உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமைச் செயலகம் உள்ள இடம் - ரோம்
15. இந்தியாவில் மிக நீளமான அணை - ஹிராகுட்
16. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்பது - கோயமுத்தூர்
17. தேசிய கீதத்தில் சீர்கள் உள்ளன - நான்கு சீர்கள்
18. குறிஞ்சி எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் - 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
19. விடிவெள்ளி என அழைக்கப்படும் கிரகம் - வெள்ளி
20. முதன்முதலில் அணுகுண்டு வீசப்பட்ட இடம் - ஹிரோஷிமா
21. உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் நாடு - கியூபா
22. சூரியக் கிரஹணம் தோன்றும் நாள் - அமாவாசை
23. "UNICEF" அமைந்துள்ள இடம் - நியூயார்க்
24. கொதிக்கும் நீரை ஒரு கண்ணாடி டம்பளரில் ஊற்றும்போது அது உடையக் காரணம் - கொதிக்கும் நீரானது அதிக அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது.
25. தத்துவ ஞானி சாக்ரடீஸ் எந்த நாட்டைச் சார்ந்தவர் - கிரேக்க நாடு
26. சஹாரா பாலைவனம் உள்ள கண்டம் - ஆப்பிரிக்கா
27. பத்து ரூபாய் நோட்டில் காணப்படும் கையெழுத்து - ரிசர்வ் வங்கி ஆளுநர்
28. 38-வது அட்சரேகை - கட்டா
29. ஹிஸ்டோஜன் கொள்கையை முன்மொழிந்தவர் - ஹைன்ஸ்டின்
30. குளிர்சாதனப் பெட்டியில் குளிர்ச்சியூட்ட உபயோகப்படுத்தும் திரவம் - பிரியான்
31. பாராசூட் துணி எதில் தயாரிக்கப்படுகிறது - நைலான்
32. ரப்பர் ஒட்டும்போது ரப்பரை பலப்படுத்த உபயோகப்படுத்தும் பொருள் - சல்பர்
33. குணத்தை தரக்கூடிய மரபுவழி முறையின் அடிப்படை என்று அறியப்படுவது - ஜீன்
34. ஹாலிஸ் வால் நட்சத்திரம் மறுபடியும் தென்படும் வருடம் - 2062
35. ராகேஷ்சர்மா என்ற முதல் விண்வெளி வீரர் பயணம் செய்த விண்வெளி ஓடம் - சோயஸ்-2
36. தாவர பாகங்களுக்கு இயந்திரம் போன்ற உதவியைக்கொடுக்கும் திசு - சொலான்சிமா
37. நமது உணவில் சிறிதளவு அயோடின் தேவைப்படுவது - தைராய்டு சுரப்பியின் செயலற்ற தன்மையை ஈடுசெய்ய
38. கல்லீரலில் சேகரிக்கப்படும் வைட்டமின் - கே
39. சாதாரண உண்ணியால் பரவும் நோய் - மஞ்சள் ஜூரம்
40. மனிதர்களுக்கு எந்த உறுப்பு சரிவர வேலை செய்யாவிடில் டையாலிஸிஸ் செய்யப்படுகிறது - சிறுநீரகம்
41. மிருகங்களின் முதுகில் உள்ள கோடுகள் எதனைச் சுட்டிக் காட்டுகிறது - தோலின் நிறம் சுற்றுப்புறத்தை ஒத்ததாக இருப்பதை
42. நாடித்துடிப்பை அறிவதனால் மருத்துவருக்கு தெரிவது - இருதயத்துடிப்பு
43. டார்ச்சு மின்கலத்தில் ஒரு ஜதை டர்மினல்களில் அடங்கியது - பித்தளை-கார்பன்
44. விளையாட்டு வீரருக்கு உடனடியாக சக்தியை அளிக்க உதவுவது - கார்போஹைட்ரேட்
45. எருதுகளும், கரடிகளும் என்ற தொடர் சம்மந்தப்பட்டது  - பங்கு சந்தை
46. மனித உடலில் ரத்தத்தில் குளுக்கோசின் அளவை ஒரே சீராக இருக்கச் செய்வது - இன்சுலின்
47. இந்தியாவின் மிகப்பெரிய உப்பு ஏரி - சாம்பார் ஏரி
48. தொழிற்சாலைகளின் அன்னை என்று எந்த உலோகமல்லாத கனிமம் அழைக்கப்படுகிறது - நிலக்கரி
49. இந்திய விண்வெளி (ISRO) ஆராய்ச்சி நிலையம் - பெங்களூர்
50. வேகமாக வளரும் மரம் - யூகலிப்டஸ் மரம்

No comments:

Post a Comment