டி.என்.பி.எஸ்.சி தமிழில் சொற்களுக்கான சரியான பொருளைத் தேர்ந்தெடுத்தல் என்ற தலைப்பில் வினாக்கள் இடம் பெறும். பெரும்பாலான வார்த்தைகள் செய்யுளில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகளாக இருக்கும். அவற்றிற்குச் சரியான வார்த்தைகளை கண்டறிந்து விடையளிக்க வேண்டும்.
திருக்குறளில் இடம்பெற்ற வார்த்தைகளுக்கு சரியான சொற்பொருளை அறிந்துகொள்வோம்.
- ஆர்வலர் - அன்புடையவர்
- புண்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
- பூசல்தரும்-வெளிப்படு நிற்கும்
- என்பு - எலும்பு (இக்குறளில் உடல்,பொருள்,ஆவியை குறிக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது.)
- ஈனும் - தரும்
- ஆர்வம் - விருப்பம்
- விருப்பம் என்பதின் பொருள் வெறுப்பை நீக்கி விருப்பத்தை உண்டாக்கும் என்பது பொருள்.
- நண்பு - நட்பு
- வையகம் - உலகம்
- என்ப - என்பார்கள்
- மறம் - வீரம்
- என்பிலது- எலும்பில்லாத (புழு)
- அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்
- அன்பு + அகத்து + இல்லா - அன்று உள்ளத்தில் இல்லாத
- வன்பாற்கண் - வண்பால்+கண் - பாலைநிலத்தில்
- தளிர்த்தற்று - தளிர்த்தது போல
- வற்றல்மரம் - வாடிய மரம்
- புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்
- எவன் செய்யும் - என்ன பயன்?
- அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு
No comments:
Post a Comment