தாய்பால் வழியாக குழந்தை எந்த வகையான நோய்த் தடுப்பாற்றலைப் பெறுகிறது? பத்தாம் வகுப்பு அறிவியல்

தாய்பால் வழியாக குழந்தை எந்த வகையான நோய்த் தடுப்பாற்றலைப் பெறுகிறது என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம். 

பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பாலுக்கு ஈடுஇணையற்ற உணவு ஏதுமில்லை என்று கூறலாம். நோய் எதிர்ப்புப் பொருள்கள் மற்றும் இம்யூனோ குளோபின்களும் தாய்பாலில் உள்ளதால் வளரும் இளம் குழந்தைகளுக்குப் தாய்பால் வழியாக நோய் எதிர்ப்புப் பொருள்கள் ஊட்டப்படுகிறது. 


செயற்கையான பால் உணவு மூலம் குழந்தைகளுக்கு எவ்வித நோய்க்கும் எதிரான தடுப்பு முறைகள் பெறமுடியாது. 


குழந்தைக்கு குறைந்தது ஆறு மாதமாவது தாய்பால் வழங்கப்பட வேண்டும். செயற்கைப் பால் உணவு மூலம் வளர்க்கப்படும் குழந்தைகளைவிடத் தாய்பால் மூலம் வளரும் குழந்தைகள் மிக்குறைவான நோய்க்கு ஆளாகின்றன என்பதை மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. 

தாய்பால், வளரும் இளம் குழந்தைகளுக்கு எஸ்ஸெரிசியா கோலி, சால்மொனெல்லா, ஷிஜில்லா, ஸ்ட்ரெப்டோ காக்கை, ஸ்டைபைலோ காக்கை போன்ற நிமோக்காக்கை பேக்ட்ரியாவிலிருந்தும், போலியோ வைரஸ், ரோட்டோ வைரஸ்களிடமிருந்தும் பாதுகாப்பளிக்கலாம். 

Post a Comment

0 Comments