டி.என்.பி.எஸ்.சி - குரூப் - IV - வரலாறு (பகுதி - 11)

1. தில்லியிலிருந்து தேவகிரிக்கு முகமது பின் துக்ளக் எதனால் தலைநகரை மாற்றினார்?

அ. தேவகிரி நிர்வாகத்திற்கு ஏற்ப மையத்தில் அமைந்திருந்ததால்
ஆ. மங்கோலிய படையெடுப்புகளால் தில்லி பாதுகாப்பு இல்லாதிருந்ததால்
இ. இந்தியாவின் தென் பகுதிகளை வெல்ல விரும்பியதால்
ஈ. இவை அனைத்துமே

2. குதுப்மினாரை யாருடைய ஞாபகார்த்தமாக இல்டுமிஷ் கட்டினார்?

அ. அய்பக்
ஆ. பக்தியார் காகி
இ. ரசியா பேகம்
ஈ. பெரோஷா துக்ளக்


3. தில்லியின் முதலாவது முஸ்லிம் ஆட்சியாளர் யார்?

அ. குத்புதீன் அய்பக்
ஆ. இல்டுமிஷ்
இ. உல்துஷ்
ஈ. கோபாட்சா

4. இந்தியாவில் துருக்கியரின் ஆட்சிக்கு வழிவகுத்தது எது?

அ. முதலாவது தரைன் போர்
ஆ. இரண்டாம் தரைன் போர்
இ. முதலாம் பானிபட்டு போர்
ஈ. இவை அனைத்துமே

5. ஆரியர்கள் இந்தியாவிற்கு எங்கிருந்து வந்தனர்?

அ. அண்டார்டிகா
ஆ. கிழக்கு ஐரோப்பா
இ. வட அமெரிக்கா
ஈ. மத்திய ஆசியா

6. இந்தியாவில் ஆரியர்களின் முதல் நிரந்தர இருப்பிடம் எது?

அ. பஞ்சாப்
ஆ. ராஜஸ்தான்
இ. சிந்து
ஈ. குஜராத்

7. ரிக்வேத காலத்து ஆரியர்கள் எங்கு வசித்தனர்?

அ. நகரங்கள்
ஆ. கிராமங்கள்
இ. சிறிய நகரங்கள்
ஈ. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள்

8. ரிக் வேத காலத்தில் ஒருவரை செல்வம் மிக்கவர் என அழைத்தது இது அதிகமாக இருந்தால் தான்

அ. பணம்
ஆ. நிலம்
இ. தங்கம்
ஈ. பசு

9. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த காலம்?

அ. கி.மு. 3000
ஆ. கி.மு. 1500
இ. கி.மு. 2500
ஈ. கி.மு. 1000

10. பிந்தைய வேத காலத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது?

அ. புஷன்
ஆ. அக்னி
இ. விஷ்ணு
ஈ. இந்திரா


விடை: 101. ஈ 102. ஆ 103. அ 104. ஆ 105. ஈ 106. அ 107. ஆ 108. ஈ 109. ஆ 110. இ

Post a Comment

0 Comments