தேர்வுக்கு எப்படி தயாராவது?

TNPSC தேர்வுக்கு எப்படி தயார் ஆவது என்பது குறித்த சரியான புரிதல் போட்டித் தேர்வர்களுக்கு இல்லாமல் இருக்கிறது. தேர்வை ஏனோ தானோ என எதிர்கொள்பவர்கள்தான் இன்று அதிகம். ஏனென்றால் அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமைதான். தேர்வு எழுதினால் வெற்றி பெற்று விடலாம் என்ற அதீத நம்பிக்கை கூட காரணமாக இருக்கலாம். தேர்வு எழுதுவோரில் 99% தோல்வியை சந்திக்கின்றனர். அதற்கு காரணம் முறையான பயிற்சி இன்மை. திட்டமிடாமல் இருப்பது. தேர்வுக்கு என்ன படிக்க வேண்டும் என தெரியாமல் இருப்பது போன்றவைதான்.

எப்படி TNPSC தேர்வுக்கு தயாராவது?

அரசு பணி வேண்டுவோர் விரும்பி எழுதுவது Tamilnadu Public Service Commission நடத்தும் போட்டித் தேர்வுகள். தேர்வில் வெற்றி பெற விரும்புபவர்கள் முதலில் தேர்வுக்கான பாடத்திட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதை முறையாக வகுத்து, திறம்பட படித்து அறிந்து கொண்டால், தேர்வில் எப்படி கேள்வி கனைகளை தொடுத்தாலும் வெற்றிக் கனியை கொய்திட முடியும்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் பொது அறிவு, பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் என்ற முறையில் வினாக்கள் அமையும்.

பொது அறிவு


  • இந்திய வரலாறு
  • இந்திய சுதந்திர போராட்டம்
  • இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியல்
  • பொது அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், லிங்கியல்)
  • இந்திய பொருளாதாரம் மற்றும் வணிகம்
  • நடப்புகால நிகழ்வுகள்
  • அறிவுக்கூர்மை
  • பொது அறிவு ( இந்தியா, தமிழ்நாடு)
  • அறவியல்


இந்த பாடங்களிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும்.

பொதுத்தமிழ் பகுதியில் பிழைத்திருத்தம் , பொருத்துக, தொடர்பு அறிதல், இலக்கணம் உட்பட 100 வினாக்கள் கேட்கப்படும்.

கணிதம்

கணித பாடத்திலிருந்து 5 வினாக்கள் குறையாமல் கேட்படும். பெரும்பாலும் அவைகள் திறன்றி கணக்கு வகைகளாக இருக்கும். கணித பாடங்களை தவறாமல் படித்து செய்து பார்த்திட்டால் அதிலும் முழு மதிப்பெண் பெற இயலும்.

வருடா வருடம் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருப்பதால், தேர்வுக்கான வினாத்தாள் கடினமாகவே தயார் செய்யப்படுகிறது.

எனவே ஒவ்வொரு பாடத்தையும் ஆழ்ந்து, அதில் உள்ள கருத்துகளை புரிந்துகொள்ள வேண்டும்.

TNPSC பயிற்சி மையத்தில் சேரலாமா?



நிச்சயமாக சேரலாம். ஆனால் பயிற்சி மையத்தில் கொடுக்கப்படும் பயற்சிகள், கையேடுகள், இதற்கு முன்பு பயிற்சி மையத்தின் மூலம் எத்தனை பேர்  போட்டித் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை விசாரித்துவிட்டு சேர்வது நல்லது.

சில பயிற்சி மையங்களில் சரியான பயிற்சியாளர்கள் இருப்பதில்லை. தரமான கேள்வி - பதில் அடங்கிய கையேடுகள் தருவதில்லை. 10ம் வகுப்பு தரத்திற்கு மட்டுமே பாடங்கள் நடத்தும் பயிற்சி மையங்கள் இருக்கின்றன. தேர்வுக்கு அது கட்டாயம் போதுமானதாக இருக்காது. இளநிலை பட்ட படிப்பு இணையாக பயற்சிகள் இருக்க வேண்டும். அப்போதுதான் Group 4, Group2, Group 1 தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்.

வார இறுதி நாட்களில் மட்டுமே பயிற்சி தரும் மையங்களில் சேர்வதை தவிர்க்க வேண்டும். வாரம் முழுமைக்குமான பயிற்சி கொடுக்கும் மையங்களில்தான் போதுமான பயிற்சியை கொடுக்க முடியும்.

பயிற்சி மையங்களில் சேர்ந்தால் மட்டும் போதுமா?


பயிற்சி மையங்களில் வகுப்பில் சேர்ந்துவிட்டோம். இனி நமக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வைப்பதில் தவறில்லை. ஆனால் அதில் உங்களுடைய 100%முயற்சியும் கட்டாயம் இருக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் பயற்சியின் மூலம் 60% நீங்கள் படித்துவிடலாம். மீத 40% கட்டாயம் நீங்கள் தயாராவதில்தான் உள்ளது.

வீட்டிற்கு சென்று நடத்திய பாடங்களை திருப்புதல், எழுதிப் பார்க்க வேண்டிய குறிப்புகளை எழுதி பாதுகாத்தல் போன்ற அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தின செய்தி தாள்களை படிக்க வேண்டும். அதில் தேர்வுக்கு தொடர்புடைய குறிப்புகளை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். பொது அறிவு கேள்விகளுக்கு பதில் அளிக்க , நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) அறிந்துகொள்ள அவைகள் உதவிகரமாக இருக்கும். 

என்ன நண்பர்களே TNPSC தேர்வுக்கு எப்படி தயாராவது? என்ற இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? கண்டிப்பாக இருந்திருக்கும் என நம்புகின்றேன். இது பற்றிய தங்களது கருத்துகளை எழுதுங்கள். நீங்கள் எப்படி தயாராகிறீர்கள், உங்களுடைய வழிமுறைகளை இங்கு குறிப்பிட மறக்காதீர்கள்.                             

No comments:

Post a Comment