TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு !!

TNPSC GK Team
0

 TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு !!



TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌ ஆனது குரூப் 1 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அது பற்றிய முழு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வு:
  தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ அறிவிக்கை எண்‌:16/2022, நாள்‌ 21.07.2022 இன்‌ வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான தேர்வு – | (தொகுதி- |) இல்‌ அடங்‌கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கு விண்ணப்பதாரர்களால்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌, சரிபார்ப்புக்கு பின்னர்‌ சில சான்றிதழ்கள்‌ முழுமையாக சரியாக பதிவேற்றம்‌ செய்யப்படாமல்‌ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள்‌ 21.07.2023 மாலை 05.45 மணிக்குள்‌ விடுபட்ட மற்றும்‌ முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்‌ செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.



இத்தகவல்‌ அவ்விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல்‌ மற்றும்‌ குறிப்பாணை (தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌) மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்‌, அவ்விண்ணப்பதாரர்கள்‌ அனைவரும்‌ குறிப்பாணையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள இ-சேவை மையங்கள்‌ வாயிலாக பஇவேற்றம்‌ செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. அவ்வாறு தவறும்‌ பட்சத்தில்‌, அத்தகைய விண்ணப்பதாரர்களின்‌ விண்ணப்பம்‌ முழுவதுமாக நிராகரிக்கப்படும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top